சருகினாலும் உண்டு பயன்!

 

குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை” என்றனர் பெருமிதத்துடன்.

சருகினாலும் உண்டு பயன்தன் சீடர்கள் மேலும் பக்குவம் பெற வேண்டும் என்று நினைத்த குரு, “சீடர்களே! நமது குருகுலத்தை ஒட்டியுள்ள காட்டிலிருந்து எதற்கும் பயனற்ற பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார்.

காட்டுக்குச் சென்ற சீடர்கள், அங்குள்ள காய்ந்த சருகுகளை, ‘பயனற்ற பொருள்’ என்று கருதினர். எனவே, தங்களது கூடையில் ஒரு மரத்தடியில் குவிந்திருந்த சருகுகளை அள்ளிப் போடத் தொடங்கினர்.

அப்போது அங்கு வந்த ஒருவன், “இந்தச் சருகு கள் என்னால் சேகரிக்கப்பட்டவை. இதைச் சாம்பலாக்கி எனது நிலத்துக்கு உரமாகப் போடுவேன். அதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்!’’ என்றான். ‘சருகுகளுக்கு இப்படி ஒரு பயனா!’ என்று திகைத்த சீடர்கள், அதை அப்படியே போட்டுவிட்டு மேலும் காட்டுக்குள் சென்றனர்.

ஓரிடத்தில் மூன்று பெண் கள் உலர்ந்த சருகுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சீடர்கள், “எதற்காக இவற்றைப் பொறுக் குகிறீர்கள்?’’ என்று கேட்டனர். முதலாமவள், ‘‘இவற்றை எரித்து, நான் உணவு சமைப்பேன்!’’ என்றாள்.

இரண்டாமவள், ‘‘சருகு களை இணைத்துப் பெரிய இலையாகத் தைத்து விற்பேன்!’’ என்றாள். மூன்றாமவள், “குறிப்பிட்ட ஒரு மரத்தின் மருத்துவ குணம் நிறைந்த சருகுகளைச் சேகரித்து நான் மருந்து தயாரிக்கிறேன்!’’ என்றாள்.

இதையெல்லாம் கேட்ட சீடர்கள் வியந்தனர். பின், மேலும் காட்டுக்குள் முன்னேறினர். அங்கு சருகுகள் கிடப்பதைப் பார்த்து அவற்றை ஆர்வ முடன் சேகரிக்க முயன்றனர். அப்போது, விர்ரெனப் பறந்து வந்த பறவை ஒன்று, ஒரே ஒரு சருகை எடுத்துக் கொண்டு விரைந்தது.

‘ஓ! இந்தச் சருகுகள் கூடுகட்டுவதற்குப் பயன் படுகிறது!’ என்று நினைத்த சீடர்கள், ‘பயனற்ற சருகே கிடைக்காது!’ என்று ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பினர்.

வழியில் ஒரு குளத்தில் சருகு ஒன்று மிதந்து கொண்டிருந்தது. ‘இதையாவது எடுத்துச் சென்று குருவிடம் கொடுப்போம்’ என்ற எண்ணத்துடன் அதை எடுப்பதற்காகக் குனிந்தான் சீடன் ஒருவன். அந்தச் சருகில் இரண்டு எறும்புகள் ஓடிக் கொண்டிருந்தன. ‘எறும்புகள் நீரில் மூழ்கிச் சாகாமல் இந்தச் சருகு பாதுகாக்கிறது!’ என்று கருதி அதையும் எடுக்காமல், குரு குலத்துக்குத் திரும்பினர்.

சீடர்களின் முகத்தைக் கவனித்த குரு தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். ‘‘வாருங்கள் என் அபி மான சீடர்களே… பயனற்ற பொருளைக் கொண்டு வந்துவிட்டீர்களா?’’ என்றார் ஆர்வமாக.

‘‘குருவே, பயனற்ற பொருள் என்று உலர்ந்த சருகு களைச் சேகரிக்க எண்ணினோம். ஆனால், அவை பல வழிகளில், பலருக்கும் பயன்படுகின்றன. பயனற்ற ஒரு சருகைக்கூட இந்தக் காட்டில் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை!’’ என்றார்கள் வருத்தமாக.

அவர்களிடம் குரு, “உலர்ந்த சருகே பல வழிகளில் இவ்வாறு பயன்படுமானால், பகுத்தறிவுள்ள மனிதன் உல கத்துக்கு எவ்வளவு பயன் படவேண்டும்?! பிறருக்கு இன்பம் பயக்கும் எவ் வளவு செயல்களைச் செய்ய வேண்டும்?! யோசித்துப் பாருங்கள்’’ என்றார்.

சீடர்கள் அவர் சொன்னதன் பொருளை உணர்ந்தனர்.

எனவே, ‘‘குருவே, உலர்ந்த சருகினால் நல்ல பாடம் கற்றுக் கொண்டோம். இனி நாங்கள் பிறருக் காகவே வாழ்வோம். அதுதான் உங்களுக்குத் தரும் உண்மையான குருதட்சிணை!’’ என்று கூறினர்.

குருவும் மகிழ்வுடன் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்!

- சரஸ்வதி பஞ்சு, திருச்சி&21. 

தொடர்புடைய சிறுகதைகள்
ராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை. அந்தக் காலத்தில் ராமாயண காவியத்தை தெரு கூத்தாகக் காட்டி பரப்பி வந்தார்கள். அப்புறம் ராமாயண கதையை நிறைய நாடகக் கலைஞர்கள் நாடகமாகப் போட்டு பரப்பி வந்தார்கள். கால§க்ஷப வித்வான்கள் ராமாயண கதையை,ஒரு வாரம்,பதினைத்து நாட்கள்,ஒரு மாசம், என்று ...
மேலும் கதையை படிக்க...
சனி ஊனமான கதை
சூரிய குடும்பத்தில், சனி சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளார்.அவருக்கு அறுபத்திரண்டு உபகோள்கள் உள்ளன.சூரிய குடும்பத்தில் சூரியனைச்சுற்றி வரும் கிரகங்களில் மிகவும் மெதுவாகச் சுற்றி வரும் கிரகம் சனி ஆகும். சனி ,சூரியனை ஒரு முறை சுற்றி வலம் வர ...
மேலும் கதையை படிக்க...
பிருகு வம்சத்தில் ஜமதக்கினி முனிவருக்கும் அவரது மனைவி ரேணுகாவுக்கும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அவதரித்தவர் பரசுராமர் .தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதிற்கிணங்க ஒரு முறை அவரது தந்தையாரின் ஆணைப்படி தாயார் ரேணுகாவை சிரச்சேதம் செய்தார் .மகனின் செயலை மெய்ச்சிய தந்தை ...
மேலும் கதையை படிக்க...
(கடவுளைக் காண முடியுமா? ஒரு ஆத்மார்த்தமான தேடலைப் பற்றிய கதை) நாளை கிறிஸ்துமஸ். ஜான் டேவிடின் இன்றைய தேவாலயப் பணிகள் முடிந்து விட்டன. மக்கள் திரளாக வர இன்னும் சில மணி நேரங்களாவது ஆகும் என்று மனதில் கணக்குப் போட்ட ஜான் டேவிட் ...
மேலும் கதையை படிக்க...
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில் அமைச்சர்கள் புடை சூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது, மன்னனின் நெருங்கிய நண்பனும், ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான். சமண கவியான ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திரம்’ கதையைப் படித்துவிட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்தச் சாமியார் மேலும் தொடர்ந்தார்... “காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிப்பதால் வலிமை; ஆற்றல்; கவர்ச்சி; திறமான யோசனை; இயக்கம்; பயபக்தி; நல்லது கெட்டதை அறியும் ஆற்றல்; செயலூக்கம்; தைரியம்; நினைவாற்றல்; ...
மேலும் கதையை படிக்க...
மும்பையில், பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதான்; கடவுள் பக்தி மிகுந்தவர். எதிர்பாராத விதமாக இவரின் இரண்டு மகன்களில் ஒருவன் இறந்து விட, நிலைகுலைந்து போனார் பிரதான். தான் வணங்கிய தெய்வங்கள் தன்னை வஞ்சித்த தாகக் கருதிய பிரதான், வாழ்வில் ...
மேலும் கதையை படிக்க...
அது 1960 ம் வருடம் என்று நினைவு... கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார். குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார். அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய ...
மேலும் கதையை படிக்க...
”யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!” கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் ஒலிகள் அடுத்த சில நொடிகளுக்கு நிசப்தமாகி மீண்டபோது அவை தாறுமாறான கீச்கீச்சுகளுடன் சிறகடிக்கும் படபடப்பொலிகளாக மாறியிருந்தன. பச்சை போர்த்த மர ...
மேலும் கதையை படிக்க...
என்னங்க! இன்னும் நம்ம சமையல்காரர் வரலை! வேலைக்கார்ரும் வரலை! மணி ஒன்பது ஆகிடுச்சு. அவங்கவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும். நமக்குத்தான் ஒரு வேலையும் இல்ல, காத்துகிட்டு இருக்கிறதைத் தவிர, அப்படினு நினைச்சுகிட்டாங்க போல. இன்றைக்கு பிரதோஷம்! அவங்க விரதங்கிற பேரிலே பட்டினியா கிடக்கிறாங்களோ, இல்லையோ? நம்மலை ...
மேலும் கதையை படிக்க...
நல்ல தம்பிக்கு உதாரணம்
சனி ஊனமான கதை
விநாயகன் ஒற்றைக்கொம்பன் ஆன கதை
கண்டேன் கர்த்தரை!
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
காயத்ரி மந்திர மஹிமை
பாபுவை குணமாக்கிய பாபா!
பிரமிப்புகள்
அமுதம்
சிவ சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)