அடியவருக்கும் அடியவன் ஆனவன் ஆண்டவன். நாராயண பட்டத்ரி, பில்வமங்களர் மற்றும் குரூரம்மை ஆகியோரின் வாழ்வில் ஸ்ரீகுருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் இதை மெய்ப்பிக்கும்!
வாத நோயால் அவதியுற்ற நாராயண பட்டத்ரி, தன்னிடம் நேரில் பேசிய ஸ்ரீகுருவாயூரப்பனின் அனுக்கிரகத்துடன் எழுதிய ஒப்பற்ற நூலே நாராயணீயம்!
பில்வ மங்களரும் குரூரம்மையும்… தினமும் தங்களது வீட்டுக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணரே வந்து விருந்துண்டு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்!
பில்வமங்களர்… ஏகாதசி, தசமி மற்றும் சிரவணம் (திருவோணம் நட்சத்திரம்) ஆகிய நாட்களில், துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்தி விரதம் இருப்பது வழக்கம். ஆனால் இந்த நாட்களில், சர்க்கரைப் பொங்கலும் பால் பாயசமும் செய்து தரச் சொல்லி… விரும்பிச் சாப்பிடு வாராம் கிருஷ்ண பரமாத்மா!
ஒரு முறை, பில்வமங்களரின் வீட்டுக்கு அவரின் நண்பர் ஒருவர் வந்தார். வயிற்று வலியால் தான் அவதிப்படுவதாகக் கூறிய நண்பர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரார்த்தித்து தனது நோயைக் குணமாக்கும்படி பில்வ மங்களரிடம் கேட்டுக் கொண்டார்.
இதன் பிறகு பகவானை தரிசித்த பில்வமங்களர், ”என் நண்பர் வயிற்றுவலியால் துன்பப்படுகிறாராம். உங்களிடம் முறையிடச் சொன்னார்!” என்றார். உடனே ஸ்ரீகிருஷ்ணர், ”இது பூர்வஜென்ம வினை. என்னால் ஒன்றும் செய்ய இயலாது!” என்றார்.
இந்த பதிலைத் தன் நண்பரிடம் தெரிவித்தார் பில்வ மங்களர். மனம் வருந்திய அந்த நண்பர், குரூரம்மையைச் சென்று சந்தித்தார். தனது வயிற்றுவலி தீர பகவானிடம் பிரார்த்திக்கும்படி அவரிடமும் வேண்டினார்.
இதையடுத்து, வழக்கம்போல் தன் வீட்டுக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணரிடம் அன்புடன் உணவு பரிமாறினார் குரூரம்மை. பிறகு, நண்பரின் வயிற்றுவலி பற்றிச் சொல்லி, ”உன்னால் மட்டுமே குணப்படுத்த முடியும்” என்று பணிவுடன் பிரார்த்திக்கவும் செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற பகவான், அந்த நண்பரது வயிற்றுவலி நீங்க அருள் பாலித்தார்.
மகிழ்ச்சியில் திளைத்தார் நண்பர். பில்வமங்களரிடம் சென்றவர், குரூரம்மையின் பிரார்த்தனையால் தனது நோய் குணமாகிய விஷயத்தைத் தெரிவித்தார்.
பில்வமங்களருக்கு கோபம். ‘தான் வேண்டிய போது பகவான் செவிசாய்க்கவில்லையே!’ என்ற வருத்தம் அவருக்கு. இதுகுறித்து பகவானிடமே கேட்டு விட்டார்.
உடனே, ”பில்வமங்களரே… நண்பரின் வயிற்று வலி குறித்து நீர் கூறியது வெறும் தகவல் நிமித்தமாகவே இருந்தது. எனவே, அதற்கான காரணத்தை மட்டும் உம்மிடம் சொன்னேன். ஆனால் குரூரம்மையின் வேண்டுதலோ, தாயன்புடன் கூடிய பிரார்த்தனையாக இருந்தது. ஆத்மார்த்தமான தூய பக்தியுடனும் அன்புடனும் வேண்டும் பக்தர்களது பிரார்த்தனையை, நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்!” என்று விளக்கினார் பகவான்.
உண்மை உணர்ந்த பில்வமங்களர் கண்ணீர்மல்க பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நமஸ்கரித்தார்.
-கே. ராஜலக்ஷ்மி, சென்னை-61 (ஜனவரி 2009)
தொடர்புடைய சிறுகதைகள்
வீட்டு சேவல் கூவியது. விடிவெள்ளி மறைந்தது. அடிவானம் சிவந்தது. ஆதவன் உதித்தது. இருள் அகன்றது. இடியாப்பசத்தம் கேட்டது.
அதிகாலை எழுந்து ஆறரை மணிக்கு வழக்கம் போல் வீடு சந்திக்கப் புறப்பட்டார் சபை போதகர் பொவனெர்கேஸ் கோபால்.
வாசல் பெருக்கி, முற்றம் தெளித்து,வரவேற்ற ...
மேலும் கதையை படிக்க...
பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி புரிந்த மன்னருக்கு, நீண்ட காலமாக ஒரு சந்தேகம்.
'வனத்தில் வசிக்கும் தவ சீலர்களான மகரிஷி கள், தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்கள்!' ...
மேலும் கதையை படிக்க...
பேரழகி இந்த வார்த்தைக்கு ஏற்ற வனப்புடையவள் உலகில் ஒரே ஒருவள் தான், அவள் தான் அகலிகை. அழகு என்பது பெண்களுக்கே உரித்தான ஒன்று. பெண்ணின் ஒளிவீசும் கண்களை எந்த ஆடவனாலும் எதிர்நோக்க முடியாது. பெண் அதீத கனவுகளுடன் தான் வளர்த்தெடுக்கப்படுகிறாள். தான் ...
மேலும் கதையை படிக்க...
சீடனுக்கு வந்த சந்தேகம்
பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத் தோரணங்கள்... வாழைப் பந்தல்கள்... வண்ண அலங்காரங்கள் என கோலாகலமாகக் காட்சியளித்தது. குறுநில மன்னர்கள், மாமுனிவர்கள், கலைஞர்கள் மற்றும் சாஸ்திர மேதைகள் பலரும் ...
மேலும் கதையை படிக்க...
‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள், ‘திருமாலின் திருவடி நமது துன்பங்களைக் களைவது போல், அண்ணன்& தம்பிகள் போன்ற நெருங்கிய உறவினர்கள்கூட நமக்கு உதவ மாட்டார்கள்’ என்பது! இதையட்டியே நம்மாழ்வாரும் திருவாய்மொழியில், ‘துயர் அறு ...
மேலும் கதையை படிக்க...
தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள்.
விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று.
இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.
"தேவ தேவா!...எமைக் காத்தருள்க..." என தேவர்கள் இறைவனிடம் இறைஞ்சிய ஒலியில் சப்த சமுத்திரங்களின் குமுறல்களும் தோற்று அடங்கின.
இறைவன் மதனை அழைத்துவர பூதகனங்களை ஏவினான். கரும்பு ...
மேலும் கதையை படிக்க...
அது 1960 ம் வருடம் என்று நினைவு...
கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார்.
குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார்.
அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய ...
மேலும் கதையை படிக்க...
மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக ...
மேலும் கதையை படிக்க...
பரம பக்தரான உத்தவர் சகாயத்தால் குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பர் நமக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஸ்ரீகிருஷ்ண பகவானால் பூஜிக்கப்பட்ட நாராயண விக்கிரகத்தை குரு பகவானிடமும், வாயு பகவானிடமும் சேர்ப்பித்தவர் உத்தவர். குரு, வாயு இருவராலும் ஸ்தாபிக்கப்பட்டதால், ‘குருவாயூர்’ என்று பெயர் பெற்றதாகப் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முறை , வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், மேரு மலையில் எல்லா முனிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் .
பெரிய ஞானிகள், முனிகள், ரிஷிகள் அந்த சந்திப்புக்கு வர வேண்டும் எனக் கட்டளை . வராவிட்டால், பெரிய தோஷத்திற்கு, பிரம்ம ...
மேலும் கதையை படிக்க...
ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!
கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?
பரதனைக் காப்பாற்ற ராமனே ஏன் செல்லவில்லை?
நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!