‘குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!’

 

பரந்தாமனின் பெருமிதம்

‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் புராணங்களில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தக் கர்ணபரம்பரைக் கதை…

‘பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பினாலும், அவர்களுக்கு தேசத்தை திருப்பித் தர மாட்டோம்’ என்றான் துரியோதனன். இதையடுத்து, பாண்டவர்களின் சார்பில் தூதராகச் சென்று, துரியோதனனைச் சந்திக்க முடிவு செய்தார் கிருஷ்ணர்.

பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனன் உள்ளிட்டோர், கிருஷ்ணரைத் தங்களது மாளிகையில் தங்க வைத்து உபசரிக்க விரும்பினர். எனவே, தங்களது மாளிகைகளை அழகுபடுத்தினர். ஊரெங்கும் தோரணங்கள் கட்டி, கிருஷ்ணரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தனர். அஸ்தினாபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஆனால், இதுகுறித்த எந்த தகவலும் விதுரனுக்குத் தெரியாது.

யார் இந்த விதுரன்?

வியாசரின் மைந்தர்; திருதராஷ்டிரனின் சகோதரன். ஞானம் படைத்தவர். தர்ம தேவதையின் அம்சமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ணரிடம் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவர்.

ஆனால், ‘அரசாங்க விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு விதுரன் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்ல!’ என்று துரியோதனன் கருதினான் போலும். எனவேதான் கிருஷ்ணரின் வருகையைப் பற்றி அவரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை!

அஸ்தினாபுரத்துக்கு வந்து சேர்ந்தார் கிருஷ்ணர். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் பீஷ்மர். மிக்க அலங்காரத்துடன் திகழ்ந்த மாளிகையைக் கண்ட கிருஷ்ணர், ‘இது, யார் மாளிகை?’ என்று கேட்டார்.

”எனது மாளிகைதான். தங்களது வருகையையட்டி அலங்கரித்துள்ளேன்!” என்றார் பீஷ்மர்.

இதைக் கேட்ட கிருஷ்ணர் எதுவும் பேசாமால், அங்கிருந்து மெள்ள நகர்ந்தார். வரவேற்க வந்தவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அடுத்து ஒரு மாளிகை. இது, பீஷ்மரது மாளிகையை விட பிரமாண்டமாக இருந்தது.

”இந்த மாளிகை யாருக்கு?”- மீண்டும் வினா எழுப்பினார் கிருஷ்ணர்.

உடனே துரோணர், ”இது என்னுடையது கிருஷ்ணா! இங்கே எல்லா வசதிகளும் உள்ளன! தாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளேன்” என்றார்.

அதனுள்ளும் செல்லாமல் நடையைத் தொடர்ந்தார் கிருஷ்ணர். அடுத்து தென்பட்டது துச்சாதனனின் மாளிகை. ”என் மாளிகையை தங்களுக்காக உல்லாசபுரியாகவே மாற்றியுள்ளேன்!” என்றான் துச்சாதனன்.

அவன் சொன்னதை கிருஷ்ணர் தன் காதிலேயே வாங்கவில்லை. மாளிகைகளின் ஆடம்பரமும் ‘என்னுடையது… என் மாளிகை…’ என்ற அவர்களது வார்த்தைகளில் தொனித்த கர்வமும் கிருஷ்ணருக்கு அறவே பிடிக்கவில்லை.

அங்கிருந்தும் அகன்றவர், தான் செல்லும் வழியில் சிறிய குடிசை ஒன்றைக் கண்டார்.

”அட! இந்தக் குடிசை அழகாக இருக்கிறதே… இதன் உரிமையாளர் யார்?” என்று கேட்டார்.

அதற்குள் அரவம் கேட்டு வெளியில் வந்த விதுரன், கிருஷ்ணரைக் கண்டதும் முகம் மலர்ந்தார். ”இது உனது வீடு கிருஷ்ணா! உனது அருளால் அடியேன் இங்கு வசிக்கிறேன். இந்த இல்லத்தில் உன் திருப்பாதங்கள் பட, நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தயவுசெய்து உள்ளே வர வேண்டும்!” என்று கூறி, கிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

கிருஷ்ணருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார். பரமாத்மா அமர்வதற்கு அங்கு தகுந்த ஆசனம் கூட இல்லை. தர்ப்பையால் ஆன பாயைத் தரையில் விரித்து, அதில் அமரும்படி வேண்டினார் விதுரன். அடுத்த கணம், எந்தத் தயக்கமும் இல்லாமல் அதில் ஆனந்தமாக அமர்ந்தார் கிருஷ்ணர்.

பிறகு, ”என்ன விதுரா… உங்களது வீடு தேடி வந்திருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது. சாப்பிட எதுவும் தர மாட்டீர்களா?” என்று உரிமையுடன் கேட்டார் கிருஷ்ணர்.

”காலையில் கஞ்சி மட்டுமே குடிப்பது அடியேன் வழக்கம். இன்றைக்கும் அவல் கஞ்சி உள்ளது. ஆனால், அதை எப்படித் தங்களுக்கு…” – தயங்கினார் விதுரன்.

ஆனால், கிருஷ்ணர் குதூகலம் அடைந்தார்.

”அடடா! அவல் கஞ்சியா… எனக்கு ரொம்பவே பிடிக்கும். கொடு விதுரா!” என்று முகம் நிறைய உற்சாகமானார் ஆவலுடன்.

உடனே விதுரன், ஒரு குவளையில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்க, அதை ரசித்துக் குடித்தார் கிருஷ்ணன். இதைக் கண்டதும் விதுரனின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

”என்ன விதுரரே? ஏன் உங்கள் விழிகளில் நீர் பெருக்கெடுக்கிறது?”- பரிவுடன் கேட்டார் கிருஷ்னர்.

”பரந்தாமா! உனக்கு, பாலும் தேனும் கலந்து… சுவையான விருந்து படைக்க பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரர் முதலானோர் காத்திருக்கிறார்கள். ஆனால் நீயோ, இந்த ஏழையின் குடிசையில் கஞ்சிக் குடிப்பதில் களிப்புறுகிறாயே..!” என்றார் விதுரன்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்த கிருஷ்ணர், ”அவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது பேச்சில், ‘நான்’, ‘எனது’ என்ற அகந்தையே வெளிப்பட்டது. ஆனால் நீங்கள் மட்டுமே, ‘இது உனது இல்லம்’ என்று கூறி என்னைப் பெருமைப்படுத்தினீர்கள்.

கஞ்சி என்றில்லை, தாங்கள் அன்புடன்… சிறிய உத்தரணியில் தீர்த்தம் தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்!” என்று கூறி விதுரனை ஆசீர்வதித்துச் சென்றார்.

- டி.ஆர். பரிமளரங்கன், திருச்சி-21 (ஆகஸ்ட் 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!
அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே? 'அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்' என்று அர்ச்சகர் மூலம் இவர் சொல்லி அனுப்ப... அனந்தாழ்வானோ, ''ஸ்வாமிக்குப் பூமாலை தொடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வர முடியாது!'' என்று அர்ச்ச கரிடம் ...
மேலும் கதையை படிக்க...
அண்டை மாநில​ம்​ தெலங்கானாவின் மிகப் பெரிய உற்சவம் ​'​போனாலு' பண்டிகை​. ​ ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் ​தக்ஷிணாயன ஆரம்பத்தை வரவேற்று, இயற்கை அன்னையிடம் மழை வேண்டி பிரார்த்திக்கும் விதமாக கிராம தேவதைகளை பூஜிக்கும் வழக்கம் இன்றும் கிராம மக்களிடம் பரவலாக காணப் ...
மேலும் கதையை படிக்க...
மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!
மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான். கல்வி, போர்ப் பயிற்சி உட்படப் பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்த ராஜசேகரன், நடனத்தை மட்டும் பயிலவில்லை. அதை அவசியம் என்று ...
மேலும் கதையை படிக்க...
'அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி ஆகிறான்!' குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந் தனர். பகவான் கிருஷ்ணரின் உதவியால் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அவரது வழி காட்டு தலுடனும் கருத்தொருமித்த சகோதரர்களின் ஒற்றுமையாலும் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார் தருமபுத்திரர். இதையடுத்து பகவான் கிருஷ்ணரின் ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம். அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் . அப்போது, தேவர்களுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது . நம்மை போல் யாரும் இல்லை, நம்மை தோற்கடிக்க இந்த உலகத்தில் எவரும் எல்லை ...
மேலும் கதையை படிக்க...
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே... எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். ‘‘கேளுங்கள் மன்னா!’’ ‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார். ‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர். ‘‘தாங்கள் நல்லதோர் ...
மேலும் கதையை படிக்க...
முனிவருக்கு ஏன் தண்டனை?
யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர். அவர்களின் தலைவன், ''முனிவரே... கொள்ளைக்காரர்கள் சிலர், இந்த வழியாக வந்தார்களா?'' என்று கேட்டான். முனிவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எரிச்சலுற்ற படைத் தலைவன், ''முனிவரே, ...
மேலும் கதையை படிக்க...
கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?
சீடனுக்கு வந்த சந்தேகம் பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத் தோரணங்கள்... வாழைப் பந்தல்கள்... வண்ண அலங்காரங்கள் என கோலாகலமாகக் காட்சியளித்தது. குறுநில மன்னர்கள், மாமுனிவர்கள், கலைஞர்கள் மற்றும் சாஸ்திர மேதைகள் பலரும் ...
மேலும் கதையை படிக்க...
"பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட கோமாதாவின் சிறப்பினை பல விதங்களில் நிரூபித்துள்ளது. பசுவின் பால், தயிர், நெய் சிறுநீர், சாணம் இவற்றை 'யக்ய திரவியங்களாக' உபயோகிக்கிறோம். 'பஞ்ச கவ்யம்' ...
மேலும் கதையை படிக்க...
சருகினாலும் உண்டு பயன்!
குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, "குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை" என்றனர் பெருமிதத்துடன். தன் சீடர்கள் மேலும் பக்குவம் பெற வேண்டும் என்று நினைத்த ...
மேலும் கதையை படிக்க...
அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!
‘போனாலு’ பண்டிகை கதை
மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!
கண்ணன் சொன்ன கதை
கேனோ உபநிஷத் கதை
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
முனிவருக்கு ஏன் தண்டனை?
கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?
பசுமாட்டு உருவில் பூமா தேவி
சருகினாலும் உண்டு பயன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)