கர்த்தரின் கருணை

 

மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி.

ஐந்து வருடங்களுக்கு முன், அவள் அழகில் மயங்கித் திகட்டாத இன்பத்துடன் தொடங்கிய வாழ்வு கசந்தவுடன், கணவன் ஜோசப் சுரேஷ், இன்னொரு பெண்ணின்மேல் மையல் கொண்டு ஓடிவிட்டான். இரண்டு வயது ஜான் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை பண்ணியிருப்பாள். அவனுக்காக மட்டுமே வாழ்ந்தாள்.

கல் உடைத்து சலித்து ஐந்து கிலோ வரை கொடுத்து, கிடைக்கும் கூலிப் பணம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாகிவிடுகிறது. பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் முதுகு ஓடிய வேலை செய்வாள். கூடுதலாக கிடைக்கும் பணத்தில் தேவையானவற்றை வாங்கும் போது நிஜார், சட்டை ஜானுக்குத் தவறாமல் வாங்கிவிடுவாள். ‘அம்மா உனக்கு ஒண்ணுமே வாங்கலியே’ என்று கேட்டால், ‘நான் நன்றாக அனுபவித்துவிட்டேன். அப்பறம் வாங்கிக்கலாம்’ என்று கூறுவாள்.

அவளுக்கு ஜோஸப்பின் நினைவு வந்தது. பண்டிகை நாட்களில் மேரி அலங்கரித்து அவன் முன் வந்து நின்றால் தன்னையே மறந்து விடுவான். இயற்கையிலேயே அழகு. மேலும் மெருகு சேர்த்தால் கேட்க வேண்டுமா? ஜான் பிறந்தவுடன் உடல் பெருத்துவிட்டது. கணவனின் அன்பும் குறைந்தது.

மகனிடம் கொள்ளை ஆசை வைத்திருந்தான். விளையாடும் பொருட்களை வாங்கிக் கொடுத்து, கூடவே அவனும் களிப்பூட்டுவான். முட்டிகள் கரையக் கரைய உப்பு மூட்டை தூக்கி ஓடும்போது ஜான் சலங்கை மணிபோல் குலுங்கிச் சிரிப்பதைப் பார்த்து மகிழ்வான். விதவிதமான புது உடைகள் போட்டுப் பார்த்து ரசிப்பான். எப்போதும் மகனை கொஞ்சுவதைப் பார்த்து, கொஞ்சம் பொறாமைகூட வந்தது மேரிக்கு. தன்னை அசட்டை செய்கிறானோ என்று நினைத்தாள்.

எல்லாமே மாறியது. கொஞ்ச நாட்களாக நேரத்திற்கு வீடு திரும்பவில்லை ஜோசப். பிறகு இரவானவுடன் வருவதில்லை. அப்புறம் வீட்டிற்கு வருவதையே நிறுத்தி விட்டான். சிலநாட்களில், வேறு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதாக முதலில் தகவல் வந்தது. பின் அவளுடன் ஊரைவிட்டு ஓடிப் போய்விட்டான் என்ற சேதி கேள்விப்பட்டவுடன் அதிர்ந்து விட்டாள். பாவம் மேரி! கணவனேதான் எல்லாமும் என்று திடமாக நினைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தாள். எத்தனை அன்பாக இருந்தான், எல்லாம் பொய்யா? மகனிடம் உயிரையே வைத்திருந்தானே? வெறும் வேஷம்தானா? ‘இனிக் குடும்பம் நடத்தமுடியாதே, கர்த்தரே!’ என்று நினைத்து மருகினாள்.

தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுக் கொஞ்ச நாட்களை சமாளித்தாள். இனி விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வந்தபோது மனதைத் திடப்படுத்திக் கொண்டு செயலில் இறங்கினாள். விடாமுயற்சியுடன் அலைந்து, கற்கள் உடைத்துப் பொடி பண்ணும் ஒரு தொழிற்சாலையில் தினக்கூலி கிடைக்கும் வேலையைத் தேடிக்கொண்டாள். மகனை நல்லபடியாக கவனித்துக் கொள்வதற்கு கர்த்தர்தான் வழிகாட்டியுள்ளார் என்று துதித்தாள்.

ஐந்து வருடங்களில் உழைத்து உடம்பு ஓடாகிவிட்டது. கல் உடைக்கும் போது வரும் பொடி மூச்சுக்காற்றில் கலந்து நெஞ்சை அடைத்தது. சில சமயம் மூச்சுவிடக் கஷ்டமாக இருக்கும். ‘நம்பினோரைக் கைவிடமாட்டார் கர்த்தர்’ என்று குறிக்கோளுடன் வாழ்ந்தாள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவருகிறது. காலை வெகுசீக்கிரம் தொழிற்சாலைக்குப் போய், அந்திசாயத் திரும்பி வந்து, மறுநாளைக்குத் தேவையான உணவைத் தயாரித்து வைத்துவிட்டுப் படுக்கையில் விழும்போது ‘அப்பாடா’ என்றிருக்கும். பக்கத்தில் உறங்கும் மகனை அணைத்துக் கொண்டு ‘கர்த்தரே! காத்து அருள்வீர்’ என்று கண்களை மூடித் தியானம் செய்தபடி உறங்கிப் போனாள்.

அசந்து தூங்கிக்கொண்டிருக்கையில், யாரோ தன்னைத் தூக்கி உட்கார வைத்து நெஞ்சைத் தடவி கொடுத்தபடி, ‘சீக்கிரமே குணமாகி சுகமாக வாழ்வாய்’ என்று கூறியது போல் உணர்ந்தாள். தூக்கம் கலைந்து விட்டது. சட்டென்று மேரி எழுந்துவிட்டாள். கண்டதுகனவு தானா!

மறுநாள் காலை எழுந்தவுடன் உடம்பு மிகவும் தெம்பாக இருப்பது போல் தோன்றியது. வேலைக்கும் போகவில்லை. ஜானை அழைத்துக் கொண்டு தேவாலயத்திற்குப் போய் பாதிரியார் வழங்கிய பரமபிதாவின் பொன்மொழிகளைக் கேட்டு உள்ளம் குளிர்ந்து, மண்டியிட்டு வணங்கி விட்டுத் திரும்புகையில், பெரியவர் ஒருவர் ‘நீங்கள்தான் மேரியா?’ என்று விசாரித்தார். ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“பெற்ற மகனுக்காக உடலை வருத்திக் கடுமையாக உழைக்கிறீர் என்று தலைமைப் பாதிரியார் மிகவும் பாராட்டினார். தங்களைப் போன்றவர்தான் எங்கள் அநாதை குழந்தைகள் காப்பகத்திற்கு ஏற்றவர் என்று பலத்த சிபாரிசு செய்தார். பொறுப்பு மிகுந்த ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறோம் எங்கள் காப்பகத்திற்கு இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டபோது ஒரு கணம் ஸ்தம்பித்தது நின்று விட்டாள்.

‘கர்த்தரே! உங்கள் கருணையேதான். எள்ளளவும் சந்தேகமில்லை’ என்று உள்ளம் உருக நினைத்தபடி “ஆகட்டும் ஐயா” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

- காமிதி (டிசம்பர் 2003) 

தொடர்புடைய சிறுகதைகள்
மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். "ஒன்றுமே சரியாகயில்லை" சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. செய்தித்தாள் படித்தாகி விட்டது. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வருகிற தமிழ் வானொலி கேட்டாகி விட்டது. எங்கேயோ ...
மேலும் கதையை படிக்க...
அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க உங்கள் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கிளி மாதிரி இருக்கிற எங்கள் அண்ணன் மகள் கிரேனாப்பு தான் என் மகன் ...
மேலும் கதையை படிக்க...
ஊர்வசியின் சாப விமோசனம்!
சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன். ஒரு முறை, சாபத்தின் காரணமாக பூலோகத்தில் வசித்திருந்த ஊர்வசி எனும் தேவலோக மங்கை யைச் சந்தித்தான் புரூரவன். அவளின் பேரழகு புரூரவனைக் ...
மேலும் கதையை படிக்க...
பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!
‘‘தர்மம் தெரிந்தவரே! எல்லா ஜீவராசி களிடமும் அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று கேட்டார் தர்மம் பற்றி நன்கு அறிந்த தருமர், பீஷ்மரிடம். பீஷ்மர் சொன்னார்: ‘‘காசி மன்னரது நாட்டின் எல்லைப் பகுதியில் ...
மேலும் கதையை படிக்க...
அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம் - ஜூன்:28 கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநல்லூர். முன் னொரு காலத்தில் இங்கு வசித்த அமர்நீதி என்பவர் துணி வியாபாரம் செய்து வந்தார். சிவபக்தியில் சிறந்த இந்த அடியவர், தனது வருமானத்தின் பெரும்பகுதியை இந்தத் தலத்தில் இருக்கும் கல்யாண சுந்தரேஸ் ...
மேலும் கதையை படிக்க...
நித்திய​ பாராயண ஸ்லோகங்களுள் ஒன்றான அன்னபூரணி துதி மிகவும் பிரபலமான ஒன்று. அன்னபூர்ணே! சதா பூர்ணே! சங்கர பிராண வல்லபே! ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி இந்த நான்கு வரி ஸ்லோகத்தில் ஒரு பரிபூரணம் காணப்படுகிறது. முதல் வரி - "அன்னம் சம்பூர்ணமாக உள்ள தாயே!" இரண்டாம் ...
மேலும் கதையை படிக்க...
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தை நாத பிரம்ம «க்ஷத்திரம் என்பார்கள். பண்டரிபுரத்தில் பஜனை செய்யும் பக்தர்களது இசைக் கருவிகளில் இருந்து கிளம்பும் நாதமே அதை மெய்ப்பிக்கும். புண்டரீகன் என்ற பக்தனின் பிரார்த்தனையில் மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு செங்கல்லின் மேல் நின்று ஸ்ரீபாண்டுரங்கனாக& ...
மேலும் கதையை படிக்க...
வெல்லத்துடன் கலந்த எலி பாஷாணம்!
கேசவ ஸ்வாமி என்பவர், கண்ணனின் பால லீலைகளில் நெஞ்சைப் பறி கொடுத்து, கண்ணனது புகழ் பாடி ஊர் ஊராக அலைந்தவர். இவரது குரல் இனிமையால் பெரிய கும்பல் இவரை எங்கும் சூழ்ந்து விடும். ஒரு முறை தன் குருவுடன் மராட்டிய மாநிலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
பாடினார்… படிக்காசு கிடைத்தது!
முத்துத் தாண்டவர் சீர்காழியில் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் தமது தொழிலைச் செய்ய முடியாமல் எப்போதும் சீர்காழி சிவாலயம் சென்றுவிடுவார். அங்கு அருள் பாலிக்கும் ஈஸ்வரர் தோணியப்பருக்கு முன் நின்று தேவாரம், திருவாசகம் பாடி வந்தார். எனவே, ...
மேலும் கதையை படிக்க...
குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும் மீறி சந்தனு அரசன் அவளைத் தடுக்க முற்பட்டான்.உரிய வயதில் உன் புதல்வன் உன்னிடம் ...
மேலும் கதையை படிக்க...
பழக்கம்
முறை மாப்பிள்ளை
ஊர்வசியின் சாப விமோசனம்!
பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!
சோதிக்க வந்த ஜோதிசொரூபன்!
அன்னபூர்ணே! சதா பூர்ணே!
பாதுஷாவின் சந்தேகம்… பாவாவின் சஞ்சலம்!
வெல்லத்துடன் கலந்த எலி பாஷாணம்!
பாடினார்… படிக்காசு கிடைத்தது!
சரதல்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)