கர்ணன் அவதரித்த கதை!

 

சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான்.

”எந்தவொரு ஜீவாத்மாவும் மரணத்தைத் தவிர்க் கவே முடியாது. எனவே, வேறு வரம் கேள்!” என் றார் பரமேஸ்வரன்.

கர்ணன் அவதரித்த கதை!1

உடனே தானாசுரன், ”எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாத வகையில், ஆயிரம் குண்டலங் களுடன் உயிர்க் கவசம் ஒன்றும் தர வேண்டும். இவை, எனது உடலை விட்டு நீங்காத வரை மரணம் என்னை நெருங்கக் கூடாது!” என்று வரம் கேட்டான்.

”அப்படியே ஆகட்டும்!” என்று கூறி மறைந்தார் ஈசன்.

பிறகென்ன, ஆணவம் தலை தூக்க… தானாசுர னின் அட்டூழியங்கள் ஆரம்பமாயின! இவனது கொடுமைகளைத் தாங்க இயலாத தேவர்கள், இந்திரனின் தலைமையில் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அபயம் அளிக்க திருவுளம் கொண்டார் திருமால். மறுகணம் அவரின் திருக்கரத்தில் இருந்து சீறிப் புறப்பட்டது சக்ராயுதம்! தலை தெறிக்க ஓடினான் தானாசுரன். விடா மல் துரத்திய சக்ராயுதம், அவனின் குண்டலங்களை ஒவ்வொன்றாக அறுத்து எறிந்தது. அவற்றின் எண்ணிக்கை குறையக் குறைய அசுரனின் பலமும் குறைந்து கொண்டே வந்தது.

உயிர்க் கவசமும் ஒரேயரு குண்டலமும் மட்டுமே மிஞ்சிய நிலையில் சிவபெருமானைச் சரணடைந்தான் அசுரன். ”பகவானே, காப் பாற்றுங்கள்!”

”தானாசுரா! உன்னைத் துரத்தி வரும் சுதர்சனம் ஒரு காலச் சக்கரம். காலத்தின் அதிபதி கதிரவன். எனவே, நீ அவனை நாடினால் பலன் உண்டு!” என்று அருளினார் சிவபெருமான்.

அதன்படி சூரிய பகவானிடம் சென்ற தானா சுரன், அவர் முன் விழுந்து வணங்கி, தன்னைக் காக்கும்படி வேண்டினான்.

”யார் நீ? உலகத்தை ரட்சிக்கும் மும்மூர்த்திகளிடம் செல்லாமல், என்னிடம் வந்த காரணம் என்ன?” என்று கேட்டார் சூரிய பகவான்.

”சிவபெருமான்தான் உங்களிடம் சரணடையச் சொன்னார். என்னைக் காப்பாற்றுவதாகத் தாங்கள் உறுதி அளித்த பின்னரே முழு விவரங்களையும் சொல்வேன்!” என்றான் தானாசுரன். வேறு வழியின்றி சூரிய பகவானும் அவனைக் காப்பதாக வாக்குறுதி தந்தார். அதன் பிறகு தன்னைப் பற்றி அவரிடம் விவரித்தான் தானாசுரன்.

”சூரிய பகவானே, நான்… தானாசுரன். பரமேஸ் வரன் அருளால் ஆயிரம் குண்டலங்கள் மற்றும் உயிர்க் கவசத்துடன் வாழ்ந்து வந்தேன். ஆனால், தேவர்களது தூண்டுதலால், என்னை அழிக்க சக்ராயுதத்தை பிரயோகித்து விட்டார் மகா விஷ்ணு. அது, எனது குண்டலங்களில் ஒன்றைத் தவிர மற்றவற்றை அறுத்தெறிந்து விட்டது. மிச்சம் இருக்கும் ஒரு குண்டலத்தையும், கவசத்தையும் இழந்து விட்டால், நான் உயிர்த் தப்ப முடியாது. தாங்களே எனக்கு அபயம் தர வேண்டும்!”

இதைக் கேட்டதும் சூரிய பகவான் திடுக்கிட்டார். அவசரப்பட்டு அசுரன் ஒருவனைக் காப்பாற்று வதாக வாக்கு தந்து விட்டோமே என்று வருந்தினார். எனினும் வேறு வழியின்றி, தானாசுரனை சிறு கோதுமையளவுக்கு மாற்றி, விழுங்கி விட்டார். மறு கணம் அவர் முன் வந்து நின்றது சக்ராயுதம்.

”சக்கரத்தாழ்வாரே, அறியாமல் அசுரனுக்கு அபயம் அளித்து விட்டேன்!” என வருத்தத்துடன் விவரித்தார் சூரிய பகவான்.

”சூரியதேவா… உன்னையும், உன்னுள் அடைக் கலம் புகுந்த அசுரனையும் இப்போதே என்னால் அழிக்க முடியும். ஆனால், உன்னை அழித்து விட்டால் உலகம் இருளில் மூழ்குமே என்றுதான் யோசிக்கிறேன்…”

- சக்கரத்தாழ்வார் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு பிரசன்னமானார் மகாவிஷ்ணு. அவரை வணங்கினார் சூரிய பகவான்.

கர்ணன் அவதரித்த கதை!2”அசுரனுக்கு நீ அளித்த வாக்கை நிறைவேற்ற… அவனை அழிக்காமல் விட்டு விடுகிறேன். துவாபர யுகத்தில், போஜராஜனின் வளர்ப்பு மகளான குந்திதேவி குழந்தை வேண்டி உன்னைப் பிரார்த்திப் பாள். அப்போது, உன் வயிற்றில் உயிரணுவாய் மாறியிருக்கும் தானாசுரனை, அவளுக்கு அளித்து விடு. பாரபட்சம் இன்றி உலகுக்கு ஒளி தரும் உனது நற்குணம் அவனிடமும் உண்டாகட்டும்!” என்று அருளி மறைந்தார் மகா விஷ்ணு.

துவாபர யுகம். துர்வாச முனிவருக்கு, தான் சிறப்பாக பணிவிடைகள் புரிந்தது… அதனால் மகிழ்ச்சியுற்ற அவர், தனக்கு வரம் அளித்தது பற்றிய சிந்தனையில் லயித்திருந்தாள் குந்திதேவி. அப்போது, வான வீதியில் பயணிக்கும் சூரியனைக் கண்டவள், தான் பெற்ற வரத்தை பரிசோதிக்க எண்ணினாள். உடனே கண்களை மூடி, துர்வாசர் உபதேசித்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தாள்.

மகாவிஷ்ணு அருளியபடி குந்திதேவிக்குக் குழந்தை வரம் தரும் வேளை வந்து விட்டதை உணர்ந்த சூரிய தேவன், தன்னுள் இருக்கும் தானாசுரனின் உயிரணுவை குழந்தையாக்கி குந்தி தேவியின் கைகளில் தந்து மறைந்தார்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு கண் விழித்த குந்திதேவி, திகைத்துப் போனாள்! கவச- குண்டலங்களுடன் திகழும் அந்த குழந்தை யைக் கண்டவள், ‘பருவம் அடையும் முன்பே குழந்தையா? உலகம் பழிக்குமே’ என்று வருந்தி நின்றாள்.

அப்போது ஓர் அசரீரி: ”குந்தியே… வருந்தாதே! நீ பெற்ற வரத்தின் பயன் இது. அதோ அந்த மரத்தடியில் பேழை ஒன்று இருக்கும். குழந்தையை அதில் வைத்து ஆற்றில் விட்டு விடு!” என்றது.

குழந்தையை ஆற்றில் விட மனம் இல்லை என்றாலும், வேறு வழியின்றி அசரீரி சொன்னபடியே செய்தாள் குந்திதேவி. ஆற்று நீரில் மிதந்து சென்ற பேழை, தேரோட்டி ஒருவனது கையில் அகப்பட்டது. அதன் உள்ளே குழந்தையைக் கண்டவன் பெரிதும் மகிழ்ந்தான்.

அந்தக் குழந்தைக்கு, ‘ராதேயன்’ எனப் பெயர் சூட்டி சீராட்டி வளர்த்தான். அந்தக் குழந்தையே பிற்காலத்தில், ‘இல்லை’ என்று சொல்லாத வள்ளல் கர்ணன் ஆனது.

முன்னர் மகாவிஷ்ணு சக்ராயுதத்தை பிரயோகித் தும் தானாசுரனை அழிக்க முடியவில்லை. ஆனால், துவாபர யுகத்தில் அவன் கர்ணனாக திகழ… குருசேத்திர போர் நடந்த வேளையில், தந்திரத்துடன் செயல்பட்டு அவனது கவச- குண்டலங்களை யாசகம் பெற்றுச் சென்றான் இந்திரன். போர்க் களத்தில் கர்ணனது தர்ம பலன் களையும் தானமாகப் பெற்று, அவனை அழித்தார் கிருஷ்ணராக அவதரித்திருந்த மகாவிஷ்ணு!
- (கர்ணபரம்பரைக் கதை)

- எம்.எஸ். ருக்மணி தேசிகன், சென்னை-33 (மே 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஊர்வசியின் சாப விமோசனம்!
சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன். ஒரு முறை, சாபத்தின் காரணமாக பூலோகத்தில் வசித்திருந்த ஊர்வசி எனும் தேவலோக மங்கை யைச் சந்தித்தான் புரூரவன். அவளின் பேரழகு புரூரவனைக் ...
மேலும் கதையை படிக்க...
வினைப்பயன் காரணமாக நரக லோகத்தில் கஷ்டப்படுபவர்களையும், துர்மரணம் ஏற்பட்டு முக்தி அடையாமல் அல்லாடுபவர்களையும் கடைத்தேற்ற பகவத் கீதையின் கர்ம யோகம் துணை புரியும். இந்தத் தகவலைச் சொல்லும் ஒரு கதை பத்ம புராணத்தில் உள்ளது. அந்தக் கதை இதுதான்: ஜடன் எனும் கௌசிக ...
மேலும் கதையை படிக்க...
வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!
வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம் சம்பாதித்து வந்தான். ஒரு நாள் பசியுடனும் களைப்புடனும் வனத்தில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான். இந்த மரக் கிளையில், நாடீஜங்கன் எனும் ...
மேலும் கதையை படிக்க...
துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!
துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த துர்வாசருக்கு, கேகயத்தின் அமைதியான சூழல் பிடித்துப் போனது. அங்கேயே தங்கி தவமியற்ற முடிவு செய்தார்! தவசீலரான துர்வாசரது வருகையை அறிந்த கேகய ...
மேலும் கதையை படிக்க...
ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?
சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான். ஒரு முறை, பிரம்மலோகம் சென்றிருந்தான் மகாபிஷக். பிரம்மனின் சபையில் தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கங்காதேவியும் இருந்தாள். அவளது மகிமையை எல்லோருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ஊர்வசியின் சாப விமோசனம்!
கடைத்தேற்ற உதவும் கர்ம யோகம்!
வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!
துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!
ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)