இறைவனே தந்த நவமணிகள்!

 

பாண்டிய நாட்டில்…

முடிசூட்டு விழாவுக்கு..இறைவனே தந்த நவமணிகள்!

பாண்டிய நாட்டை வழுதியின் மைந்தன் வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக நல்லாட்சி நடத்தி வந்தான். அவனிடம் நற்பண்புகள் பல இருந்தாலும், திருஷ்டி பரிகாரம் போல் சிற்றின்ப ஆசையும் இருந்தது. முறையான பட்டத்து அரசி இருந்தும், காமக் கிழத்தியர் பலர் வீரபாண்டியனுக்கு இருந்தனர். அவர்களும் அந்த அரண்மனையிலேயே தங்கியிருந்தனர்.

பட்டத்தரசிக்கு வாரிசு இல்லை. ஆனால், காமக் கிழத்தியருக்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். எனவே, அங்கயற்கண்ணம்மை சமேத சொக்கநாத பெருமானை பல்வேறு வகை நோன்புகளை நோற்று விரதமிருந்து வழிபட்டாள் பட்டத்தரசி. விரைவிலேயே கருவுற்றாள். உரிய காலத்தில் அழகான ஆண் மகவு ஒன்றை ஈன்றாள். குலம் விளங்க வந்த திருமகனைக் கண்டு, மகிழ்ச்சியுற்று பொன்னும் மணியும் தான தர்மமாக வாரி வழங்கினான் அரசன்.

இறைவனே தந்தவீரனாக வளர்ந்தான் இளவரசன். ஒரு முறை பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்ற மன்னனை புலி ஒன்று கொன்று விட்டது. மன்னனின் மரணச் செய்தி கேட்ட காமக் கிழத்திகள் அகப்பட்ட தைச் சுருட்டிக் கொண்டு ஓடினர். அந்தக் கொள்ளையில் மன்னனது மணிமகுடம்கூட மிஞ்சவில்லை. இளவரசனுக்கு முறைப்படி மகுடம் சூட்ட அமைச்சர் பெருமக்கள் ஏற்பாடு செய்தனர். மணிமகுடம் காணாமல் போனதை அப்போதுதான் கண்டுபிடித்தனர். மட்டுமின்றி அரண்மனைக் கருவூலம் காலியாகி இருப்பதும் தெரிந்தது.

புதிய மணிமகுடம் செய்வதற்குத் தேவையான தங்கமும் இல்லை. எல்லோரும் இறைவனிடம் முறையிட ஆலயம் சென்றனர். அப்போது இறைவன் ஒரு நவமணி வணிகர் போல ஆலய வாசலுக்கு வந்தார். தம்மிடம் இருந்த நவமணிகளைப் பரப்பிக் காட்டினார். அவரின் தோற்றத்தில் ஐயம் கொண்ட அமைச்சர் ஒருவர், ‘‘வணிகரே! தாங்கள் இந்த நாட்டினர் போல் தெரியவில்லையே… தாங்கள் யார்?’’ எனக் கேட்டார்.

‘‘நான் இமய மலையை ஒட்டிய நாட்டைச் சேர்ந்த வைர வியாபாரி. பாண்டிய நாடு வளமானது என்பதால், இங்கு வணிகம் செய்ய வந்துள்ளேன்!’’ என்றார் வணிகர் (இறைவன்). அவரிடமிருந்த நவமணிகளைச் சோதித்த அமைச்சர்கள் வியப்படைந்தனர். அவை தரத்தில் சிறந்தவையாக இருந்தன. ‘ஒருவேளை இது தேவ லோகத்தைச் சேர்ந்தவையோ?’ என ஐயமுற்றனர்.

‘‘ஐயன்மீர்! உலகத்தில் கிடைக்கும் சாதாரணமான வைரங்கள் அல்ல இவை. அனைத்துமே ‘வலன்’ என் பவனது உடற்கூறுகள்!’’ என்றார் வணிகர்.

‘‘யாரந்த வலன்? அவன் உடற்கூறு எவ்வாறு நவ மணிகளாயின?’’ என அமைச்சர்கள் கேட்டனர்.

‘‘வலன் ஓர் அசுரன். அவன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டான். சிவபெருமான், அவனுக்குக் காட்சி தந்து, வேண்டிய வரம் யாதெனக் கேட்டார். வலனும் பரமனைத் துதித்து, ‘இறைவா! எவராலும், எந்த ஆயுதத்தாலும் சாகாத வரம் தந்தால் சந்தோஷம் அடைவேன். ஊழ்வினையினால் நான் சாக நேர்ந்தால், என் உடற்கூறுகள் நவமணிகளாகி பிறருக்குப் பயன்பட வேண்டும்!’ என்றான். பரமனும் அப்படியே வரம் தந்தார். உடனே வலன், இந்திரனைப் போருக்கு அழைத்தான். வலன் பெற்ற வரத்தால் இந்திரன் போரிடாமல், வேறு வழிவகை காண விரும்பினான். ஆகவே, வலனை பிரமாதமாக வரவேற்றான். ‘வெற்றி வீரனே! உன் போன்ற மாவீரனை வரவேற்பதில் பெருமை கொள்கி றேன். உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறேன்!’ என்றான். இந்திரனை ஏளனமாகப் பார்த்த வலன், ‘இந்திரனே! உன்னைவிட நான் சக்தி வாய்ந்தவன். பரமனிடம் வரம் வாங்கியவன். நீ வேண்டுமானால் என்னிடம் வரம் கேள். தருகிறேன்!’ என்றான்.

‘சரி… மேரு மலைச் சாரலிலே நான் யாகம் ஒன்று செய்ய உள்ளேன். அப்போது, நீ ஒரு யாகப் பசுவாக வர வேண்டும்!’ என்றான் இந்திரன். வலனும் சம்மதித்தான். தாமதிக்காமல் வேள்வியை ஆரம்பித்தான் இந்திரன். தான் சொன்னபடியே வலன் வந்து சேர்ந்தான். யாக முனிவர்கள் தர்ப்பைக் கயிறு கொண்டு வலனைத் தூணில் பிணைத்து அங்கம் அங்கமாக வெட்டி, யாகத் தீயிலிட்டனர். உடன் வலன் தெய்வ உடம்பு பெற்றான்.யாகத் தீயிலிட்ட வலனின் ரத்தம் மாணிக்கமாகவும், பற்கள் முத்துகளாகவும், எலும்புகள் வச்சிரமாகவும், கண்கள் நீலக் கற்களாகவும், தசை பவழமாகவும், நிணம் கோமேதகமாகவும், பித்தம் மரகதமாகவும், கோழை புஷ்பராகமாகவும், தலைமுடி வைடூரிய மாகவும் மாறின. இப்படித்தான் இவை தோன்றின!’’ என்றார் வணிகர்.

பின்னர் வணிகர், மணிகளைத் தேர்ந்தெடுத் துக் கொடுத்து, ‘‘இவற்றால் மணிமகுடம் தயாரித்துச் சூட்டுங்கள். இளவரசனை அரிய ணையில் அமர்த்தும்போது ‘அபிஷேகப் பாண்டியன்’ என்று பெயர் சூட்டுவீர்களாக!’’ என்றார்.

நவமணிகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், அவற்றுக்குப் பணம் தர முற்படுவதற்குள் வணிகர் மறைந்து போனார். ‘வணிகர் வடிவில் வந்தவர் சோமசுந்தர கடவுளே!’ என்றுணர்ந்து அனைவரும் வியந்தனர். முடிசூட்டுவிழா கோலாகலமாக நடை பெற்றது. அபிஷேகப் பாண்டியன், சோமசுந்தர கடவுளை வணங்கி, அரியணை ஏறினான். வாழ்வில் நலம் பல பெற்றான்.

- மெய்விளம்பி மெய்யப்பன், கிருஷ்ணகிரி-1 (மார்ச் 2007) 

தொடர்புடைய சிறுகதைகள்
அட்சய திருதியையும் அன்னதானமும்!
அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன், குபேரன் ஆனதும், சூரியதேவனின் அருளால் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான்! 'அட்சயம்' என்றால் அழியாதது; அள்ள அள்ளக் குறையாதது ...
மேலும் கதையை படிக்க...
கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட அவள், பித்ரு தேவதைகளை எப்படியும் தரிசிக்க விரும்பினாள். அதற்காக அவள் அச்சோதம் நதிக்கரையில் 8,000 வருடங்கள் தவம் செய்தாள். அதனால் மனம் ...
மேலும் கதையை படிக்க...
பீஷ்மர் சொன்ன கதை
தாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி! 'பதறாத காரியம் சிதறாது' என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய உலகில், எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்! அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும்; அதுவும் எப்படி? இப்போதே அனுபவித்துவிட வேண்டும்! இதற்கு நேர்மாறாக யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் போதும்; ...
மேலும் கதையை படிக்க...
பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!
முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, 'இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?' என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத்திரம் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சிரார்த்தம்’ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது). மஹரிஷி அகஸ்தியர் ஆபஸ்தம்பரிடம் பொறுமையாகச் சொல்ல ஆரம்பித்தார்: “அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்குமே உலகில் உலகியல் பிரமாணமாகச் சொல்லப் படுகிறது. இந்த நான்கு சப்தங்களை விட, வேத ...
மேலும் கதையை படிக்க...
பரந்தாமனின் பெருமிதம் 'உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!' என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் புராணங்களில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தக் கர்ணபரம்பரைக் கதை... 'பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பினாலும், அவர்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, ...
மேலும் கதையை படிக்க...
ஆண்டிபட்டி என்ற அழகான கிராமம்,தேனி மாவட்டத்தில் உள்ளது.இவ்வூர் வைகை நதிகரையில் மலையும்,மரங்களும்,பூக்கள் மலர்ந்த செடிகளும் சூழ்ந்து உள்ளன. நம் கதையின் கதாநாயகி வானதி, ஓர் அழகான எளிமையான குடும்பத்தில் இவூரில் பிறந்தவள். சிறு பருவதிலிருந்தே, எப்பொழுதும் அவள் வீட்டில் உள்ள அழகான நாகலிங்க ...
மேலும் கதையை படிக்க...
"பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட கோமாதாவின் சிறப்பினை பல விதங்களில் நிரூபித்துள்ளது. பசுவின் பால், தயிர், நெய் சிறுநீர், சாணம் இவற்றை 'யக்ய திரவியங்களாக' உபயோகிக்கிறோம். 'பஞ்ச கவ்யம்' ...
மேலும் கதையை படிக்க...
வலக் கரத்தால் ஆசி வழங்காத அப்பய்ய தீட்சிதர்!
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் அப்பய்ய தீட்சிதர். தீட்சிதரின் குல தெய்வம், வேலூரை அடுத்த விரிஞ்சை திருப்பதியில் உறையும் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீமார்க்கசகாயர். தீட்சிதர் சம்ஸ் கிருத மொழியில் தேர்ந்த மாமேதை. இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
அட்சய திருதியையும் அன்னதானமும்!
அமாவாசை பிறந்த கதை!
பீஷ்மர் சொன்ன கதை
பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!
மஹரிஷிகள்
‘குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!’
தாரை
வானதியின் ஐஸ்வரியம்
பசுமாட்டு உருவில் பூமா தேவி
வலக் கரத்தால் ஆசி வழங்காத அப்பய்ய தீட்சிதர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)