அறிவுரை சொன்ன பறவை!

 

மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை.

அறிவுரை சொன்ன பறவை!ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை எந்த சந்தர்ப்பத்திலும் நெருங்கக் கூடாது. அத்தகைய வாழ்வை நான் பெற என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான்.

முனிவர், ‘‘மன்னா! அதோ தெரியும் சிறிய குகை வழியே சென்றால் ஒரு நீர்த் தடாகத்தைக் காணலாம். அதில் உள்ள தீர்த்தத்தை அருந்தினால் நீ கேட்ட மரணமற்ற பெருவாழ்வு ஸித்திக்கும்!’’ என்று சொல்லி, புன்னகையுடன் வழிகாட்டினார்.

மன்னன், வேகமாக அந்தக் குகை வழியே சென்று முனிவர் சொன்ன தடாகத்தை அடைந்தான். அதன் கரையில் பறவை ஒன்று சோகமாக அமர்ந்திருந்தது. மன்னன் அதைப் பொருட்படுத்தாமல் தடாகத் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் எடுத்துக் குடிக்க முற்பட்டான். வேகமாகப் பறந்து வந்த அந்தப் பறவை நீரைப் பருகவிடாமல் அரசனைத் தடுத்தது.

‘‘முட்டாள் பறவையே… ஏன் தடுக்கிறாய்?’’ என்று கோபத்துடன் கேட்டபடி பறவையைக் கீழே தள்ளி விட்டான் மன்னன். மண்ணில் விழுந்த பறவை எழுந்து அதிசயிக்கத் தக்க வகையில் பேசத் தொடங்கியது!

‘‘அரசனே, நீதான் முட்டாள்! சொல்கிறேன், கேள். உன்னைப் போல நானும் பறவை என்ற முறையில் பல போகங்களை அனுபவித்து விட்டேன். பறவைகள் அனைத்துக்கும் நான் தலைவனாக உள்ளேன். என்னுடனும், எனக்கு முன்னரும் பிறகும் பிறந்த பறவைகள் எல்லாம் பல இறக்கவும், சில வாழவும் பார்த்து விட்டேன். நான் தின்று பார்க்காத உணவு, தின்பண்டம் எதுவுமில்லை. நான் ஒரு முதிர்ந்த பறவை. எனக்குப் பிறந்த அத்தனை குஞ்சுகளும் அதன் சந்ததிகளும் இறந்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த நிலையில் சோக வாழ்வு என்னைச் சூழ்ந்திருக்கிறது. இத்தனைக்கும் காரணம் சாகாவரம் தரும் இந்தத் தடாக நீரை ஒரு முறை நான் பருகியதுதான். என் வயது சுமார் 300 ஆண்டுகள். இப்போது வாழ்க்கையை வெறுத்து, நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தும் சாக முடியவில்லை. நான் செய்த தவறை நீயும் செய்து என்னைப் போல் துன்பப்பட வேண்டாம்.

இந்தத் தடாகத்தின் தண்ணீரை நீ அருந்தினால் பல ஆண்டுகள் வாழ்வாய். ஆனால், உன் உயிருக்கு உயிரான மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், அவர்களின் சந்ததிகள், நண்பர்கள்& இவர்கள் யாவரும் உன் கண் முன்பாகவே இறந்து போவார்கள். இந்த சோகங்களைத் தாங்கும் இதயம் உனக்கு உண்டா? ஆகவே, ‘நீடூழி வாழப் போகிறேன்’ என்று இந்தச் சகதியில் சிக்கி, மனதளவில் மாண்டு விடாதே, போய் விடு!’’ என்று அந்தப் பறவை சோகத்துடன் சொன்னது.

பறவையின் இந்த அறிவுரை மன்னனின் கண்களைத் திறக்கச் செய்தன. பறவைக்கு இதயபூர்வமான நன்றியைக் கூறியவன், அந்த நிமிடமே தனது அரச போக வாழ்க்கையைத் துறக்கும் முடிவுடன் நாடு திரும்பினான்.

- புலவர் ராதாகிருஷ்ணன் உபன்யாசத்திலிருந்து…
_ லலிதா சாய், சென்னை-91 

தொடர்புடைய சிறுகதைகள்
பீஷ்மர் சொன்ன கதை
தாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி! 'பதறாத காரியம் சிதறாது' என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய உலகில், எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்! அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும்; அதுவும் எப்படி? இப்போதே அனுபவித்துவிட வேண்டும்! இதற்கு நேர்மாறாக யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் போதும்; ...
மேலும் கதையை படிக்க...
திருதராஷ்டிரன், தன் மனக் குறையை வியாசரிடம் சொல்லிப் புலம்பினான்: ''பகவானே! சூதாட்டத்தால் எவ்வளவு தீமைகள் விளைந்து விட்டன? பீஷ்மர், துரோணர், விதுரன், காந்தாரி என எவருமே சூதாட்டத்தை விரும்பவில்லை. இது அறியாமை யால் நடந்து விட்டது. துரியோதனன் அறிவற்றவன் என்பது தெரிந்திருந்தும், ...
மேலும் கதையை படிக்க...
அட்சய திருதியையும் அன்னதானமும்!
அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன், குபேரன் ஆனதும், சூரியதேவனின் அருளால் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான்! 'அட்சயம்' என்றால் அழியாதது; அள்ள அள்ளக் குறையாதது ...
மேலும் கதையை படிக்க...
நம் ஆலயங்களின் அமைப்பில் உள்ள அற்புதங்களை விளக்கும் ​ஆன்மிகம். ​கோவிலுக்குப் பக்கத்தில் குளம் வெட்டியது ஏன்? -​ நம் நாட்டுக் கோயில்களின் கட்டுமான அமைப்பின் சிறப்பை புரிந்து கொள்ள எந்த வித முயற்சியும் நாம் எடுத்துக் கொள்வதில்லை என்றே கூற வேண்டும். மற்ற மதங்களோடு ...
மேலும் கதையை படிக்க...
ஸ்ரீகிருஷ்ணரின் அருள்
திருடர்களிடம் அர்ஜூனன் தோற்றது ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவ தாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின் துவாரகை நகரைக் கடல் கொண்டது. ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் திருமாளிகை மட்டும் தப்பித்தது. கிருஷ்ணரின் தேவியரில் ருக்மணி உட்பட எட்டுப் பேர், கிருஷ்ணரின் திருமேனியுடன் அக்கினி பிரவேசம் ...
மேலும் கதையை படிக்க...
புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதும் களைப்பு தெரியவில்லை, ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள பாடல்களை பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் ஆனந்தமாக பயணிப்பதால் அவர்களுக்கு தலைச்சுமையும் தெரியவில்லை, நேற்று இரவு அவர்களது பயணக்குழு தங்கியிருந்த இடம் காடுசார்ந்த முல்லை நிலம் ஒன்றின் ...
மேலும் கதையை படிக்க...
மதிவாணியின் மறுபிறவி!
தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில் குரல் கொடுக்கும் பசுக்கள். இந்தச் சூழலில், இறைவனை தியானித்தபடி இடுப்பளவு நீரில் நின்ற கௌதம முனிவர், கதிரவனை நோக்கிக் கரம் ...
மேலும் கதையை படிக்க...
காப்பாற்றியது பாராயணம்!
ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்: பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள் வசித்த என் அண்ணன், தன் மகனின் பணி இடமாற்றத்தின் காரணமாக பெங்களூ ருவுக்கு குடி பெயர்ந்தார். அங்கு, பொங்கலுக்கு முதல் நாள் கடைத்தெருவுக்குச் ...
மேலும் கதையை படிக்க...
பத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு பணத்திற்கு குறைவில்லை. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, பத்து வருடங்களில் அவரது மௌசு குறைந்து விட்டது. ரசிகர்கள் அவரது படங்களை ...
மேலும் கதையை படிக்க...
சீதையாக வந்த பார்வதிதேவி!
பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ''ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன். முடிந்ததும் புறப்படலாமே?!'' என்றாள் தேவி. இதைக் கேட்டதும், ''தேவி... நம்மைத் துதிக்கும் அடியவர்களுக்கு அருள்வதில் தாமதம் கூடாது. ...
மேலும் கதையை படிக்க...
பீஷ்மர் சொன்ன கதை
காமதேனுவின் கண்ணீர் ஏன்?
அட்சய திருதியையும் அன்னதானமும்!
கோவிலுக்குப் பக்கத்தில் குளம் வெட்டியது ஏன்?
ஸ்ரீகிருஷ்ணரின் அருள்
ஏது காரணம்!? ஏது காவல்!?
மதிவாணியின் மறுபிறவி!
காப்பாற்றியது பாராயணம்!
மனசாட்சி
சீதையாக வந்த பார்வதிதேவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)