அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!

 

அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே?

‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று அர்ச்சகர் மூலம் இவர் சொல்லி அனுப்ப… அனந்தாழ்வானோ, ”ஸ்வாமிக்குப் பூமாலை தொடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வர முடியாது!” என்று அர்ச்ச கரிடம் சொல்லி விட்டார். இதனால் ஏற்பட்ட கோபம். விழி சிவக்கக் காத்திருந்தார் பகவான்.

அனந்தாழ்வானுடன்ஆயிற்று… பூமாலை கட்டி முடித்த அனந்தாழ்வான், அதை எடுத்துக் கொண்டு சந்நிதிக்கு வருவதை அறிந்த ஏழுமலையான், தனக்கு முன்பு இருந்த திரையால், கருவறை வாயிலை மூடினார்.

சற்றும் பதறாத அனந்தாழ்வான், திரையை விலக்கி, உள்ளே நுழைய முற்பட்டார்.

”அங்கேயே நில்!” கடும் குரலில் உத்தரவிட்டார் பகவான். இதைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தார் அனந்தாழ்வான்.

”பிரம்மனும் ருத்ரனும் கூட என் உத்தரவை மீறியதில்லை. என்ன தைரியம் உனக்கு? உன் மாலையும் வேண்டாம்; சேவையும் வேண்டாம். இப்போதே கிளம்பு… உன்னை இந்த ஏழுமலையில் இருந்து நாடு கடத்துகிறேன்!” என்றார் திருமால்.

மெள்ள புன்னகைத்த அனந்தாழ்வான், ”என்னை அனுப்ப நீர் யார்?” என்றார்.

இதை, பாலாஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை! ”என்ன சொல்கிறாய்?”- திகைப்புடன் கேட்டார்.

”ஸ்வாமி, தங்களைப் பற்றிய ஒரு பாடல் உண்டு…

மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்!
ஸ்வாமி புஷ்கரிணிதீரே ரமயா ஸஹ போததே…

அதாவது, ‘சகல கல்யாண குணங்கள் படைத்த மகாவிஷ்ணு, ஸ்ரீவைகுண்டத்தை விட்டு அலமேலு மங்கையுடன் இந்த (திருப்பதி) புஷ்கரணி தீர்த்தத்துக்கு வந்திறங்கினார்’ என்கிறது இந்தப் பாடல். ஆக, இந்த இடம் உமக்கே சொந்தமில்லை. எனக்குச் சற்று முன் இங்கு வந்த உமக்கு, என்னை வெளியேற்ற என்ன அதிகாரம் உள்ளது? இன்னொரு விஷயம்… நீங்கள் அழைத்து நான் இங்கு வரவில்லை. என் ஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜர் கட்டளைப்படி இங்கு வந்தேன்.”

”அதனால் என்ன?” – இடைமறித்தார் பெருமாள்.

”பூக்கள், மொட்டுகளாக இருக்கும்போதே பறித்து, அவை மலர்வதற்குள் மாலை தொடுத்து, உமக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஆச்சார்யரது ஆணை. தாங்கள் அழைத்ததும் நான் வந்திருந்தால், மொட்டுகள் மலர்ந்திருக்கும். ஆச்சார்யரது ஆணையை மீறிய குற்றத்துக்கு நான் ஆளாகி இருப்பேன். எனக்கு அவரே முக்கியம். அவர் ஆணைப்படி தொடுத்த மாலை இது. அணிவதும் அணியாததும் உங்கள் இஷ்டம்” என்ற அனந்தாழ்வான் திரும்பி நடந்தார்.

அனந்தாழ்வானின் ஆச்சார்ய பக்தியில் நெகிழ்ந்த ஏழுமலையான் இரு கரம் நீட்டி அவரைத் தடுத்தார். ”அனந்தா… உனது குரு பக்தியை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம். பிரம்மாவுக்கும் ருத்திரருக்கும் அளிக்காத புருஷார்த்தங்களை உனக்குத் தருகிறேன். வேறு என்ன வேண்டும்… கேள்!” என்றார்.

உடனே பகவானின் திருவடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய அனந்தாழ்வான், ”ஸ்வாமி… எனது இந்தச் சேவை ஆயுளுக்கும் தொடர அனுக்கிரகியுங்கள்” என வேண்டினார்.

அப்படியே அருள் பாலித்த ஏழுமலையான், அனந்தாழ்வாரின் சீடர்களுக்கும், அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சப்பேறு கிடைக்கும் என அருள்புரிந்தார். பிறகு, அனந்தாழ்வானுக்கு சீடர்கள் பெருகினர்.

‘நம்மாழ்வாரே தன் தெய்வம்!’ என்று குரு பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்த மதுரகவியாழ்வாருக்கு ஒப்பானவர் அனந்தாழ்வார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இவரின் சீடர்களுக்கு மதுர கவி தாசர்கள் என்ற பெயரும் வந்தது.

- விஜயா ஸ்ரீதரன் (ஜனவரி 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
"சத்தியப் பிரமாணம் என்பது அளவுகோல். நான் என் வாழ்க்கைக்கு இந்த விழுமியங்களை அளவுகோலாகக் கொண்டு வாழ்வேன். இவற்றில் எதாவது ஒன்றையாவது தவறினேனானால் அந்த பாவம் என்னை தீவிரமாக பீடிக்கும்" என்றான் உத்தமன் பரதன். தான் எவற்றை அளவுகோல்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தானோ அவற்றையே ...
மேலும் கதையை படிக்க...
முக்தி எப்போது?
ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார். நாரதரிடம், ‘‘தேவரிஷியே... எங்கு செல் கிறீர்கள்?’’ என்று கேட்டான் அந்த தவ சீலன். ‘‘பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்!’’ என்றார் நாரதர். ‘‘அப்படியானால், கடவுள் எனக்கு எப்போது ...
மேலும் கதையை படிக்க...
பரதனைக் காப்பாற்ற ராமனே ஏன் செல்லவில்லை?
‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள், ‘திருமாலின் திருவடி நமது துன்பங்களைக் களைவது போல், அண்ணன்& தம்பிகள் போன்ற நெருங்கிய உறவினர்கள்கூட நமக்கு உதவ மாட்டார்கள்’ என்பது! இதையட்டியே நம்மாழ்வாரும் திருவாய்மொழியில், ‘துயர் அறு ...
மேலும் கதையை படிக்க...
தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும் நம் நினைவில் வைத்திருக்க உதவும் சாதனைகளே இவை. ஆனால் தெய்வத்திற்குப் பிடித்தமான செயலை நாம் மறந்து விடக் கூடாது. அதுவே தர்மத்தை கடைப்பிடிப்பது. ...
மேலும் கதையை படிக்க...
‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’
முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு, துர்வாச முனிவர் வருகை தந்தார். மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர் முத்கலரின் குடும்பத்தார். துர்வாசரிடம், ''ஸ்வாமி, தாங்கள் இன்று இங்கு தங்கி, உணவருந்திச் ...
மேலும் கதையை படிக்க...
தியானம் - 5 வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன் தந்தை வேத வியாசரை அரித்தான் குழந்தை சுகதேவ். “பிரம்ம ஞானத்தை எனக்கு இப்போதே உபதேசி !” வேத வியாசரும், சுக தேவரை ( ...
மேலும் கதையை படிக்க...
அம்பலப்படுத்த வந்த அந்தணர்!
சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதன் பாடல்கள், எட்டு அடி கொண்டதால், ‘அஷ்ட பதி’ என்று வழங்கப்படுகிறது. கீதகோவிந்தத்தில் ‘வதஸியதி’ எனத் துவங்கும் பாடலை இறைவனே ...
மேலும் கதையை படிக்க...
[அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'நள்ளிரவு', 'இரத்த உறவு', 'நாயினும் கடையர்' போன்றவை முக்கியமான சிறுகதைகள். இரத்த உறவு பல விமர்சகர்களின் கவனத்தைப் பெற்ற இவரது கதைகளில் முக்கியமானது.] மாலை வேளையிலே வெள்ளிப் பனிமலையின் உச்சியிலே அகில லோக நாயகனான பரமேஸ்வரன் பராசக்தியோடு வழக்கம் போல் ...
மேலும் கதையை படிக்க...
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [ஓம்! பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான தம்மை பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்து அலையும் தாருகாவனத்து ரிஷிகளைப் பங்கப்படுத்துவதற்குப் புறப்பட்டார்.] பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத் திருந்த அவ்வுள்ளத்தில், பூவுலகின் ...
மேலும் கதையை படிக்க...
காவிரியில் தந்தையை இழந்தான்…
ஹரிதாஸ் கதை காவிரியில் தந்தையை இழந்தான்... கங்கையில் தாயை இழந்தான்... ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். ஒரு முறை, இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாஸர், கிருஷ்ணபட்டரின் மகள் பிரேமாவுக்கு, 'சரிகமபதநி' எனும் சப்த ஸ்வரங்களை போதித்தார். இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் ...
மேலும் கதையை படிக்க...
பரதன் எடுத்த சபதம்
முக்தி எப்போது?
பரதனைக் காப்பாற்ற ராமனே ஏன் செல்லவில்லை?
நந்திக்குப் பின் சிவன்
‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’
தியானம் செய்ய வாருங்கள் !
அம்பலப்படுத்த வந்த அந்தணர்!
இரத்த உறவு!
நெற்றிக் கண்
காவிரியில் தந்தையை இழந்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)