பேசும் புளிய மரங்கள்

 

புளியங்காடு கிராமத்தில் அடர்த்தியான புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்த படியால் அந்த பின் தங்கிய கிராமத்துக்கு அந்த பெயர் வந்தது ரயில்வே நிலையத்தில் இருந்து அக் கிராமத்துக்குப் போக ஆறுமைல்களுக்குக் கரடு முரடான பத்தடி அகலமுள்ள கிரவல் பாதை. அதுவே கிராமத்துக்குப் போகப் பலரால் பாவிக்கப் பட்ட பிரதான சாலை .

சுமார் நானூறு குடும்பங்கள் வாழும் அக் கிராமத்துக்கு மின்சாரம் கிடையாது.மோட்டார் வாகனம் குறைவு பல ஏக்கர் பரப்புள்ள தாமரைக் குளம். அதோடு இணைந்த ஒரு சிற்றாறு. புலம் பெயர்ந்து வரும் பல விதமான பறவைகளின் இருப்பிடம் அக்குளம் ஒரு இடிந்த கோட்டைக்கு அருகே சோழர் காலத்து பண்டைய கல்வெட்டுகள் மூன்று இருந்தன . குறு நில மன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் அந்த கிராமத்துக் காட்டுக்கு மான். முயல், காட்டுச் சேவல் ,பறவை வேட்டையாட வந்ததாகக் கிராமவாசிகள் பெருமையாகச் சொல்லுவார்கள்.

கால் நடையாகவும், சைக்கிள் மாட்டு வண்டிலில் தமது உற்பத்தி பொருட்களை ஊர்வாசிகளின் எடுத்துச் செல்ல போகுவரத்ததுக்கு உதவும் சாலை அது பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்குச் செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள், அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்துச் செல்ல, அவர்களுக்கெல்லாம் இக்கால சாலையோர சிறு மோட்டல்கள் போல அக்காலத்தில் அமைந்தவைதான், நிழல் தரும் புளியமரங்கள். பகலில் புளிய மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்

அந்தப் பாதை ஓரத்தில் இரு பக்கத்திலும் சடைத்து ஓங்கி வளர்ந்த புளியமரங்கள் அந்த மரங்கள் பற்றி சில மரபுக் கதைகள் உண்டு., அம்மரங்களில் சிலர் தூக்கு பொட்டு தற்கொலை செய்ததால் பயத்தில் இரவில் அந்த பாதை வழியே போவோர் குறைவு அந்த கிராமத்தைப் பல வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த குறுநில மன்னன் மூக்கையா தேவன் என்பவன் சரியான கண்டிப்பானவன். அவனுக்கு மரங்கள் வளர்ப்பதில் பிரியம்அதிகம் ஒருவரையும் மரங்களை வெட்ட விட மாட்டான் கிராமத்தில் குற்றம் புரிந்தவர்களை அந்த மரத்தில் கட்டி வைத்து சவுக்கை கொடுத்தாக ஊர்வாசிகள் சொன்னார்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களும் கொலை திருட்டு கற்பளிப்பு போன்ற குற்றம் செய்தவர்களும் அந்த புளியமரங்களில தூக்கிடப்பட்டார்கள். எது எப்படி இருப்பினும் அந்த அந்த மரங்களின் வயது சுமார் நானூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். அந்த மரங்கள் இருபதால் அந்த கிராமத்தில் மழைக்குக் குறைவில்லை அந்தக் கிராமம் வறட்சியை அறியவில்லை பச்சைநிற வயல்கள் பாதை ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் நிழலில் பயணிகள் தங்கிச் செல்வார்கள் இருமைல் தூர இடை வெளியில் இரு சுமைதாங்கிகள் இருந்தன. அதை மூக்கையா தேவன் கட்டியது என்பர் ஊர்வாசிகள். அந்த புளியமரங்கள் இலை தெரியாது காய்க்கும் அக் காய்கள் கிராமவாசிகளுக்கு உணவாகவும் அமையும்

ஒரு புளியமரத்தின் கீழ் ஒரு கற் பிள்ளையார் இருந்தார் . சாலையில் போவோர் வருவோரை யானைகள் சிறுத்தைதகள் தாக்காமல் அவர் பார்த்துக் கொண்டார். அவர் புளியமரங்க்ளுக்கும் காவல் என்பார்கள் ஊர் சனங்கள்

32 அறங்களில் ஒன்று ஆதீண்டுகுற்றி

நாட்டு மாட்டுக்குச் செய்யும் தர்மங்களில் ஒன்று அது மாடுகளின் தோலில் ஏதும் தினவு ஏற்பட்டால் அவைகளால் சரி செய்ய முடியாது. அவை உராய்ந்து கொள்ள ஓர் இடத்தை தேடிப் போகும். ஆடுகளுக்கும் இது பொருந்தும்.

இதற்காக உருளை ( cylindrical ) அல்லது எண்கோண ( Octagon ) வடிவ கல்லை முன்னோர் நட்டார்கள். இதற்கு ஆ உராய்வு கல் என்று பெயர். மருவி ஆவுரிஞ்சி கல் என்றானது இவை சுமைதாங்கிகளுக்கு அருகே காணலாம் இதனை ஓர் அறசெயலாக கருதி செய்தனர். மாடுகள் மேய்ந்து விட்டு, நீர் அருந்த வரும் பகுதியில் இக்கல் பெரும்பாலும் நடப்பட்டது

இவ்வளவு இயற்கை வளம் நிறைந்த கிராமத்தில் சிப்பிக்குள் முத்து போல் மூக்கையதேவன் பரம்பரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் சிவராமன் வாழ்ந்து வந்தார். அவரின் பொழுது போக்கு மரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது. . மரங்களைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு ஆராய்ச்சி நூல்கள் எழுதி இருக்கிறார். சூரியனிடம் இருந்து சக்தி பெறும் மரங்கள் மனிதர்களைப் போல் வாழ்கிறது அவைக்கு உயிர் உண்டு. மனிதனைப் போல் பேசும் சக்தி உண்டு . அவை தமக்கிடையே பேசிக் கொள்கின்றன என்று சிவராமன் கிராமவாசிளுக்கும் கிராமத்துப் பள்ளி மாணவர்களுக்கும் சொல்லுவார். அவர் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் கையில் ஒரு கருவியோடு புளியமரங்களோடு பேசுவதைக் கண்டு பலர் இவருக்குப் பைத்தியம் என்று கேலி செய்வார்கள் . அவர் கையில் வைத்திருந் ஒரு கருவியை மரத்தின் வேர்களில் இணைத்து அவை சமிக்ஞை மூலம் பேசுவதைப் பதிவு செய்து தனது கணனியில் மென் பொருள் ஒன்றின் மூலம் அவை பேசுவதை அறிவார் . மரங்களுக்கிடையே வேர்கள் மூலம் தகவல் பரிமாற்றம் நடப்பதைக் கண்டறிந்தார்.

என்ன மரங்கள் பேசுகின்றன என்று பார்த்த போது

ஒரு மரம் சொல்லிற்று எனக்கு இப்போது வயது முன்னூறு உன் வயசு என்ன”?

பக்கத்தில் உள்ள மரம் சொல்லிற்று “நான் உன்னிலும் பார்க்க நூறு வருடங்கள் மூத்தவன் என்னை மன்னர் நட்டவர். சில சமயம் நான் காய்க்கும் புளியங்காய்கள ஆய்ந்து செல்வார்”

இன்னொரு மரம் சொல்லிற்று “என் கொப்பில் இருவரை வெள்ளையர்கள் தூக்கில் தொங்க விட்டார்கள். என்னால் அதை எதிர்க்க முடியவில்லை” என்று ’

இன்னொரு மரம் சொல்லிற்று” என்னில் மூன்று பறவைகள் கூடு கட்டி குடித்தனம் செய்கின்றன அவை குஞ்சு பொரித்துச் செல்லும் போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா”?

’இன்னொரு அடர்தியான மரம் சொல்லிற்று நான் சுமைதாங்கிக்கு அருகே இருப்பதால் சாலையில் செல்வோர் என் மரத்து புளியம்காய்களை ஆய்ந்து செல்வார்கள் “

சற்று முதிர்ந்த மரம் சொல்லிற்று என் வயசு 500 வருசம் எங்கள் மன்னருக்கும் வெள்ளையனுக்கும் இடையே நடந்த போரைக் கண்டவன் நான் ’ அந்த போரின் போது என்னைச் சுற்றி ஒரே இரத்த வெள்ளம்” .

பேராசிரியர் சிராரமன் தான் பதிவு செய்த மரங்களின் உரையாடலை கேட்டு ரசித்தார்

ஒரு மரம் சொல்லிற்று மற்றைய மரங்களுக்கு” உங்களுக்குத் தெரியுமா எங்கள் எல்லோருக்கும் ஒரு பெரிய ஆபத்து வர இருக்கிறது என்று”?.

”என்ன ஆபத்து என்று சொல்லு” இன்னொரு ஒரு மரம் கேட்டது

இந்த கிரவல் பாதையை விஸ்தீரித்து தார் போட்ட பாதையாக்கி பஸ்களும் வாகனங்களும் போக வசதி செய்த கொடுக்கப் போகிறது அரசு , குளத்துக்கு அருகே ஓசூ சிறு ஹோட்டல் சுற்றுலாப் பாணிகளுக்கு கட்டப் போவாதாக அவர்கள் பேசுவதை அறிந்தேன்’அவர்களுக்குத் தெரியாது நாங்கள் இருப்பதினால் இந்த கிராமத்துக்கு மழை பெய்கிறது என்று.”

இன்னொரு மரம் சொலிற்று

“சாலையோரம் இருக்கும் நாங்கள் சாலையின் மேல் ஓடும் தண்ணீரை உறிஞ்சி சுத்தம் செய்யும். சக்தி உள்ளவர்கள் இதன் மூலம் வெள்ளம் மற்றும் மண் அரிப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறோம் . மேலும் தூய்மையான நீர் விநியோகத்தை மேம்படுத்தவும் உதவுகிறோம் . ஒரு முக்கியமான நன்மை என்னவென்றால்,:

சாலையோரத்தில் உள்ள நாங்கள் சூரியன் மற்றும் மழையிலிருந்து நிழலையும் மறைப்பையும் கொடுக்கிறோம்

இது சுற்றுச்சூழலுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறோம்

மணல் அரிப்பைத் தடுக்கிறோம்

மற்றும் தூசித் துகள்களை. இல்லாமல் செய்கிறோம் நாங்கள் கிரீன்ஹவுஸ் விளைவு மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கிறோம் அதோடு இந்த சாலையோர பகுதியை அழகுபடுத்துகிறோம் இது தெரியாமலா எங்களை வெட்டப் போகிறார்கள் “ .

பேராசிரியர் சிவராமன் மரங்களின் இந்த உரையாடலைச் சாலைகள் பெரிதாக்கும் அரசின் அமைச்சின் பிரதம அதிகாரி ராஜேந்திரனுக்குப் போட்டுக் காட்டினர் அவர் பேராசிரியர் சிவராமனின் மாணவன்

மரங்களின் உரையாடலைக் கேட்ட ராஜேந்திரன் “சேர் என்னால் இதை நம்ப முடியவில்லை பாவம் மரங்கள், தங்கள் ஆதங்கத்தை யாருக்குச் சொல்வார்கள் உங்களைத் தவிர “

“ராஜேந்திரன் மரங்களின் மொழி அவைகளுக்கு மட்டுமே புரியும் ஆனால் நான் ஆராய்ச்சி செய்து அவைகள் அனுப்பும் சிக்கெனல்களைப் பகுத்து அறிந்து விட்டேன் வெகு விரைவில் நான் மரங்களோடு தொடர்பு கொண்டு அவைகளின் தேவைகளைக் கேட்டறிவேன்”

”சேர் இந்த மரங்களுக்கு ஆபத்து வராமல் நான் இந்த கிரவல் சாலையை திசை திருப்பி வேறு வழியில் போக ஆவன செய்கிறேன் உங்கள் புளியமரங்கள் பாதுகாக்கப் படும் இது என் வாக்குறுதி” என்றார் ராஜேந்திரன்’

“நன்றி ராஜேந்திரன் வெகு சீக்கிரம் இந்த நல்ல செய்தியைச் சாலை ஓர புளியமரங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் சிரித்தபடி பேராசிரியர் சிவராமன்

(யாவும் புனைவு) 

தொடர்புடைய சிறுகதைகள்
சூரிய கிரகணம் நாம் அழைக்காமலே அழையா விருந்தாளியாக இரண்டரை நிமடங்கள் அமெரிக்கர்களை வந்து ஆகஸ்ட்2017 இல் தரிசித்துப் போய் விட்டது. வின்கல் மழை தங்கள் சொரிவைக் அடிக்கடி காட்டிப் போகும். வால் நடசத்திரம் என்ற தூமகேது தன் நீண்ட வாலின் அழகைக் ...
மேலும் கதையை படிக்க...
1480 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சுறாவளியால் இராமேஸ்வரம் உற்பட 11 தீவுகள் தோன்றின அதில் கச்சைதீவும் உள்ளடங்கும். இராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் ;அமைந்த 285 ஏக்கர் பரப்புள்ள மக்கள் வாழாத தீவு. இத்தீவைச் சுற்றி நல்ல ...
மேலும் கதையை படிக்க...
ஸ்காபரோ வைத்தியசாலையின் நான்காம் மாடி கட்டிடத்தில உள்ள இருதய நோயாளிகளின் வார்டில் 421ம் அறையில் படுத்திருந்த இந்திரனுக்கு கடந்த மூன்று தினங்களில் நடந்தது எல்லாம் கனவு போலிருந்தது. முப்பது வயதுடைய இந்திரனுக்கு இந்த இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இருதயம் ...
மேலும் கதையை படிக்க...
பௌதிகத் துறை பேராசிரியர் ராஜன் அஸ்டிரோ பிசிக்சில் (Astro Physics) எனப்படும் வான்யியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்கல் தோற்றமும் அதனால் பூமியின் பாதிப்பு பற்றி அவர் ஆராச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். வானியற் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை விஞ்ஞானி ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது தொழில் நுட்ப அறிவை பாவித்து உதவியாளன் இன்ஸ்பெக்டர் ராஜனின் உதவியோடு கண்டு பிடித்தவர். ...
மேலும் கதையை படிக்க...
தூமகேது (The Comet)
கச்சத்தீவு
காதலின் மறுபக்கம்
விண்கல்
கொசு செய்த கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)