கொரோனா வைரசும் கிரகவாசியும்

 

கேம்பபிரிட்ஜ் பல்கலை கழக உயிரியல் மருத்துவத்துறை பரிசோதனை கூடத்தில் உலக மக்களின் உயிர்களை பல நாடுகளில் பலி எடுக்கும் கொரோனா வைரசுசுக்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் மருதுவத் துறை விஞ்சானிகள் தீவீரமாக இரவு பகலாய் ஆராச்சி செய்து கொண்டு இருந்தனர் . அவர்களில் சிலர், இங்கிலாந்து , பிரான்ஸ். இந்தயா இலங்கை , சீனா. கனடா தேசத்தை சேர்ந்தவர்கள் . அவர்களில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழன் கார்த்திக்கும் ஒருவர். அவர் படித்தது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் . அக்கல்லூரியில் இருந்து கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு தெரிவான மூன்று மாணவர்களில் கார்த்திக்கும் ஒருவன். கார்த்திக்கின் தந்தை சுந்தர்மூர்த்தி இம்யூனாலஜிஸ்ட( Immunologist) என்ற நோய்த்தடுப்பாற்றல் மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர் , அவரின் விருப்பப்படியே கார்த்திக் பதாலஜீ (Pathology) என்ற நோய்க்குறியியல்துறையில் படித்து கலாநிதி பட்டம் பெற்று இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி கூடம் ஒன்றில் வேலைசெய்தார் . அவர் இங்கிலாந்துக்கு குடும்பத்தோடு புலம் பெயர வேண்டிய முக்கியகாரணம் 1983 ஜூலையில் நடந்த இனகலவரம் . அந்த கலவரத்தில் அவர் குடும்பம் பாதிக்கப்பட்டது. அதோடு அவர் கொழும்பில் வேலை செய்த எம் ஆர் ஐ (M.R.I) என்ற மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் அவரின் ஆற்றலை கண்டு பொறாமை கொண்ட சிங்கள மேலதிகாரிகள் அவரின் பதவி உயர்வுக்கு முட்டுக் கட்டை போட்டனர் .

மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திக், திருமணம் செய்தது யாழ்பாணத்தில் ஒரு டாக்டரின் மகள் வசந்தியை . அவளும் ஒரு டாக்டர். கார்த்திக் தம்பதிகளுக்கு ஆதவன் என்ற ஒரு மகன் மட்டுமே . கொழும்பில் ராயல் கல்லூரியில் படிக்கும் போது அவனுக்கு ஐஸ்ட்ரோபிஜிக்ஸ ( Astro Physics) என்ற வான் இயற்பியல் துறையில் ஆர்வம் இருந் படியால் கொழும்பில் வசித்த சேர் ஆர்தர் சி கிளார்க் ( Sir Arthur C Clerk) என்ற பல அறிவியல் நாவல்கள் பல எழுதிய எழுத்தாளரோடு தொடர்பு இருந்தது. அவரின் வீட்டில் இருந்த டெலெஸ்கோப்பை பாவித்து பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்னகள் பற்றிகற்றறிந்தான் . சூரிய குடும்பம் போன்று கொடிக்கணக்கான் நட்சத்திர குடும்பங்கள் பிரபஞ்சத்தில் பல ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருகின்றன என்று கிளார்க் சொன்னது முதலில் ஆதவனுக்கு புரியவில்லை .பின்னர் ஓரு ஒளிஆண்டு என்பது ஒளி செகண்டுக்கு 300,000,000 கிமீ வேகத்தில் ஒரு வருடத்தில் செல்லும் 9,500,000,000,000கி மீ தூ தூரத்தை குறிக்கும் என்று அவர் விளக்கிய போது ஆதவனுக்கு தூரத்தின் அளவு எவ்வளவு மிகப் பெரியது என்று தெரியவந்தது .

அது மட்டுமல்ல சூரியனை தவிர பூமிக்கு அருகே உள்ள நட்சத்திரங்கள் ஆல்பா செண்டூரி ஏ மற்றும் ஆல்பா செண்ட au ரி பி ஆகியவை, ஆல்பா சென்டாரியில் சிறிய, பூமி போன்ற கிரகங்கள் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். பூமியிலிருந்து சராசரியாக 4.3 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன.

மூன்றாவது நட்சத்திரம் ப்ராக்ஸிமா செண்டூரி. இது பூமியிலிருந்து சுமார் 4.22 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது” என்றார் கிளார்க்

“ எங்கள் சூரிய குடும்பத்தில் உள்ள பூயியில் வாழும் உயரினங்களை போல் இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர குடும்பத்திலும் உயிரினங்கள் உண்டா” என்று ஆதவன் கேட்ட கேள்விக்கு கிளார்க் சிரித்தபடியே சொன்னார்

“அந்த நட்சத்திரங்கள் பயணிக்க முடியாத வெகு தூரத்தில் இருப்பதால் அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா இல்லையா என்று சொல்வது கடினம். அப்படி வாழ்ந்தாலும் அதிக நுண்ணறிவு கூடிய ஜீவராசிகள் அங்குஇருக்கலாம் என்பது என் கருத்து” என்றார் சேர்ஆர்தர் சி கிளார்க்.

அவரோடு பிற கிரகவாசிகள் பற்றியும் வானியல் சம்பந்தப் பட்ட விசயங்கள் பற்றி ஆதவன் பேசிமகிழ்ந்தான் . அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலின் போது சேர்ஆர்தர் சி கிளார்க் சொன்னார்

“கர்தாஷேவ் அளவுகோல் படி ஒரு நாகரிகத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அளவை அளவிடுவதற்கான ஒரு ஊக முறையாகும், இது ஒரு நாகரிகம் பயன்படுத்தக்கூடிய ஆற்றலின் அளவை அடிப்படையாகக் கொண்டது. டிரேக் சமன்பாடு என்பது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் செயலில், தகவல்தொடர்பு வேற்று கிரக நாகரிகங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு நிகழ்தகவு வாதமாகும்

வேற்று கிரக நுண்ணறிவைத் தேடுங்கள் சில சமயம் அவை கிடைத்தால் எங்கள் பூமியில் உள்ள பிரச்சனைகளுக்கு நாம் விடை காணமுடியும் “

“ அப்போ சேர் எப்படி நாம் அவர்களோடு தொடர்பு கொள்ள முடியும் “?

“ஆதவன் நான் ரேடியோ சமிக்ஞைகள் அனுப்புவது பற்றி இரண்டாம் உலக யுத்தத்தின் போது நன்கு அறிந்தவன். அந்த துறையில் வேலை செய்தவன் அதற்கு தகுந்த மின் கருவிகள் தேவை .

பல தசாப்தங்களாக வேற்று கிரக நுண்ணறிவிலிருந்து சமிக்ஞைகளை நான் தேடி வருகிறேன், திடமான முடிவுகள் எதுவும் இல்லை. ஆக்டிவ் செட்டி (எக்ஸ்ட்ரா-டெரஸ்ட்ரியல் இன்டலிஜென்ஸிற்கான செயலில் தேடல்) என்பது புத்திசாலித்தனமான வேற்று கிரக வாழ்க்கைக்கு செய்திகளை அனுப்பும் முயற்சி. செயலில் உள்ள SETI செய்திகள் பொதுவாக ரேடியோ சிக்னல்கள் வடிவில் அனுப்பப்படுகின்றன. முன்னோடி தகடு போன்ற இயற்பியல் செய்திகளும் செயலில் உள்ள SETI செய்தியாக கருதப்படலாம்”.

”சேர் இதை பற்றிய பயிற்சியை எனக்கு தாருங்கள். மென் பொருள் துறையில் எனக்கு ஆர்வம் இருப்பதால் , பிற கிரகத்தில் இருந்து வரும் சமிக்ஞைகளை மொழி பெயர்த்து செய்தி என வென்று அறிந்து நாம் பயன் படுத்தலாம் அல்லவா”.

“நல்ல யோசனை ஆதவன் . ரேடியோ சிக்னல்கள் மூலம்,தொடர்பு கொள்ளும்முறையை உமக்கு சொல்லி தருகிறேன்”: என்று சேர் ஆர்தர் சி கிளார்க் ஆதவனுக்கு சொல்லிக் கொடுத்தார் .

****

இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பிறந்த பின் ஆதவன் அங்குள்ள் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் படித்து வான் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றான். தான் இலங்கையில் கற்றறிந்த பிற கிரகவாசிகளோடு ரேடியோ சிக்னல்கள் மூலம் தொட்டர்பு வைதிருந்தான்

உலகில் பல்நாடுகளில் வேக்மாக பரவி வரும் கொரோனா வைரசை பற்றி விபரித்து அதை போக்க மருந்து உண்டா என்பது அறிய உதவிகேட்டு ரேடியோ சிக்னல்கள் மூலம் செய்தி அனுப்பினான் . சில நாட்கள் பதில்கள் வரவில்லை . சில வேளை அவர்கள் வாழும் கிரகத்தில் நோய்கள் இல்லையோ என தன் மனதுக்குள் ஆதவன் நினைத்தான்

அன்று ஒருநாள் அவன் எதிர்பாராத விதமாக வந்த ரேடியோ சிக்னல்கள் அவனுக்கு ஆச்சரித்தை கொடுத்தது தன் மென் பொருள் அறிவை பாவித்து பகுப்பாய்வு செய்த போது அந்த செய்தியில்

” கால தாமதத்துக்கு மன்னிக்கவும். உங்கள் வைரஸ் பிரச்சனையை இங்குள்ள விஞ்சானிகளிடம் கொடுத்த போது அவர்கள் அது போன்ற வைரஸ் கிருமிகளை உருவாக்கி. அவைற்றின் மரபணுக்களை பகுப்பாய்வு செய்து. அந்த கிருமிகளை விரைவில் கொல்வதற்கு வழி கண்டு பிடிக்க நேரம் எடுத்து விட்டது இந்த செய்தியுடன் கிருமிகளை சில நேரத்தில் அழிக்கும் முறையை விபரித்து இருக்கிறேன் இது நிட்சயம் வேலை செய்யும் . உங்கள் உலக மக்களை அழிவில் இருந்து காப்பாற்ற சந்தர்ப்பம் தந்ததுக்கு நன்றி . இன்னொன்று இங்கு குறப்பிட விரும்புகிறேன் . எங்கள் கிரகவாசிகளின் நுண்ணறிவின் மீது பொறாமை கொண்ட இன்னொரு கிரக வாசிகள் எங்கள் கிரகத்தின் மீள் இது போன்ற உயிர் கொள்ளி ஆயுதத்தை பாவிக்க முயற்சித்து படு தோழ்வி அடைந்தார்கள் . அந்த அனுபவம் இந்த நோயை அழிக்கும் வழியை கண்டு பிடிக்க உதவியது “.

வந்த பதிலை பார்த்து கொரோனா வைரஸ் பயோ வெப்பன் என்ற ஒரு உயிர் கொல்லி ஆயுதம் என்ற முடிவுக்கு ஆதவன் வந்தான்.

****

தந்தை கார்த்திக்கு முழு விபரம் ஆதவன் சொன்னபோது அவர் அதை முதலில் நம்பவில்லை

“அப்பா இந்த செய்தியில் சொன்னபடி மருந்தை தயாரித்து பரீட்சித்து பாருங்கள். சில வேலை அது வெற்றியாக அமையக் கூடும் “ என்றான் ஆதவன். தன்னுடன் வேலை செய்யும் நண்பர் பீட்டருடன் மகனுக்கு வந்த செய்தி பற்றி பேசி. இருவரும் ஆராச்சி கூடத்தின் தலைவரிடம் பிற கிரகத்தில் இருந்து வந்த செய்தி பற்றி சொன்னார்கள். அவரின் அனுமதி பெற்று வந்த செய்தி படியே பரிசோதனை நடத்தி மருந்தை கண்டு பிடித்தனர். அதை கொரோனா வியாதியால் பாதிக்கப்படட மூவரில் பாவித்து ஒரு மணிநேரத்தில் அவர்களின் உடலில் பலமாற்றங்கள் ஏற்றபட்டு சுயநிலைக்கு அவர்கள் திரும்பியதை கண்டார்கள்

கொரோன வைரசை ஒழிக்க கண்டு படித்ததாக பல்கலைகழகத்தின் மூலம் ஊடங்களுக்கு அறிவித்தார்கள். பிற கிரகவாசிகள் தந்த செய்தி மூலம் மருந்து கண்டு பிடிக்கப் பட்டது என்பதை

அவர்கள் குறிப்பிட வில்லை.

ஒரு சில நாட்களில் கொரோன்ன வைரஸ் உலகளவில் பரவுவது தடுகப்பட்டது

(யாவும் புனைவு) 

தொடர்புடைய சிறுகதைகள்
நான் பிறந்து, வளர்ந்து, படித்து, தாவரவியலில் பட்டம் பெற்று ஆசிரியராக வேலை பார்த்து, குடும்பம் நடத்தும் ஊர் இலுப்பையூர், அனேகம் ஊர் பேர்கள் மரத்துடன் தொடர்புள்ளது. உதாரணத்துக்கு உரும்பிராய், விளாத்திகுளம், ஆலங்குளம், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம் இப்படிப் பல ஊர்ப் பெயர்களில் ...
மேலும் கதையை படிக்க...
ஸ்காபரோ வைத்தியசாலையின் நான்காம் மாடி கட்டிடத்தில உள்ள இருதய நோயாளிகளின் வார்டில் 421ம் அறையில் படுத்திருந்த இந்திரனுக்கு கடந்த மூன்று தினங்களில் நடந்தது எல்லாம் கனவு போலிருந்தது. முப்பது வயதுடைய இந்திரனுக்கு இந்த இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இருதயம் ...
மேலும் கதையை படிக்க...
நானும் என் மனைவி ஜானகியும் யாழ்ப்பாணக் குடாநாட்டை பிறப்பிடமாக கொண்ட அறிவியல் பட்டதாரி அசிரியர்கள் இருவரும் புத்தளத்தில் சஹிரா க்ல்லூரியிலும் பாத்திமா மகளிர் கல்லூரியிலும் படிப்பித்தவர்கள் . புத்தளம் ம் கொழும்பில் மேற்க்கு கரையோரமாகா A3 பெரும்பாதில்யில் வடக்கே 82 மைல் ...
மேலும் கதையை படிக்க...
மதியழகன்- மாலதி தம்பதிகளுக்கு திருமணம் நடந்து ஐந்துவருடங்களாகியும் பிள்ளைகள் கிடைக்கவில்லை. அவர்கள் பிடிக்காத விரதங்கள் இல்லை போகாத கோயில்கள், சுற்றாத அரச மரங்கள் இல்லை. ஒரு குழந்தையைச் சுவீகாhரம் ஏடுத்து வளர்க்கக், கூட சிந்தித்தார்கள், ஆனால் அதை அவர்களின் பெற்றோர் விரும்பவில்லை. கடைசியாக ...
மேலும் கதையை படிக்க...
இரத்தினக் கற்கள் அதிகம் காணப் படும் நாடான இரத்தினபுரி மன்னர் இரத்தினசிங்கத்தின் ஒரே மகள் வடிவுக்கரசி. பெயருக்கு ஏற்ப அழகானவள் . அவளுக்கு நீண்ட கூந்தல். கயல்விழிகள் முத்து போன்ற பற்கள் அவளின் அழகை வர்ணித்து கவி பாட வார்த்தைகள் தேடினார் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது தொழில் நுட்ப அறிவை பாவித்து உதவியாளன் இன்ஸ்பெக்டர் ராஜனின் உதவியோடு கண்டு பிடித்தவர். ...
மேலும் கதையை படிக்க...
நத்தார் தாத்தாவுக்கு மரியாவிடம் இருந்து ஒர் கடிதம். வருடா வருடம் நான் தூங்கும் போது என் கட்டிலில் எனக்குத் தெரியாமல் பரிசுகளை வைத்துவிட்டு போகும் என் அருமை நத்தார் தாத்தாவுக்கு மரியா எழுதுவது நான் என் தாத்தாவை மூன்று வயதுக்கு பின் காணவில்லை ...
மேலும் கதையை படிக்க...
முகவுரை தேவ தாசிகள் என்ற கோவிலில் நடனமாடும் தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த ஆடற்கலையே ‘சின்னமேளம்’ என்று மக்கள் அழைத்ததாக அறிய முடிகின்றது. அரசவைக் களங்களிலும், சில ஆண்டவன் சந்நிதிகளிலும் ஆடப்பட்டு கால ஓட்டத்தில் எல்லாக் ...
மேலும் கதையை படிக்க...
பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது. நானும் மனைவியும், என் மகளும் மருமகனும், ஒன்ராறியோவில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில் வாழ்ந்த காலமது. ரொன்றோவிலிருந்து மேற்கே சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள கேம்பிரிஜ் நகரத்தை “கிராண்ட்” நதி பெயருக்கேற்ற கம்பீரத்துடன் ...
மேலும் கதையை படிக்க...
ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக இருக்கிறது. சிலர் அத்தேர்வை எவ்வளவு கவனமாக நடத்தினாலும் சிலசமயங்களில் தோல்வியடைந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது ஒன்று சில சமயம் நடப்பது ...
மேலும் கதையை படிக்க...
என் தோட்டத்து இலுப்பைமரம்
காதலின் மறுபக்கம்
காதரின் கசாப்புக் கடை
இந்திராவும் சந்திராவும்
இளவரசி வடிவுக்கரசி
கொசு செய்த கொலை
தாத்தாவுக்குக ஒர் கடிதம்
சதிராட்டக்காரி சந்திரவதனி
இன்வா
எதிர்பாராதது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)