13B யாவரும் நலம்!

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 47,999 
 

‘ம்ஹூம்… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அடக்கிக்கொண்டு கிடப்பது! இனிமேல் சத்தியமாக முடியாது.’ மனோகர் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டான். ‘இனிமேல் நைட் பத்து மணிக்கு மேல் டி.வி-யே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களாப் பார்த்து அவஸ்தை ஆயிடுது.’

மனோகர் 27, கன்னி கழியாத பையன். சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கை நிறையக் காசு. ஊரில் அப்பா-அம்மா. வார இறுதியில் பீர். தினமும் ஒரு கிங்ஸ் பாக்கெட். இதைத் தவிர பெரிய தப்புத்தண்டா ஏதும் இல்லை. கொஞ்ச நாளாகத்தான் அந்த எண்ணம் வந்தது. ‘கன்னி கழிஞ்சுட்டா என்ன?’

இன்டர்நெட்டை மேய்ந்தான். தூக்கம் வராத பொழுதுகளில் இணையமே துணை. இரவுகளில் இவன் பார்ப்பது பெரும்பாலும் ‘பலான’ சைட்டுகள். மேய்ந்துகொண்டே இருந்தபோது, திடீரென அந்தப் பக்கம் திறந்தது. ‘ஓரிரவுக்குப் பெண் வேண்டுமா?’ மனோகர் அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை ஆராய்ந்தான். ஓர் அலைபேசித் தொடர்பு எண் அளிக்கப்பட்டிருந்தது.

”ஹலோ! நான் மனோகர் பேசுறேங்க. இன்டர்நெட்டில் இந்த நம்பரைப் பார்த்தேன்!”

”உடனே வாங்க” என்று காதில் தேன் ஊற்றிய குரல், பெசன்ட் நகரின் ஒரு அட்ரஸைச் சொன்னது.

”வந்துங்க… எவ்ளோ அமௌன்ட்னு..?”

”ப்ளீஸ் கம் ஃபாஸ்ட்.”

முதல் அனுபவம். யாரையும் ஆலோசிக்கும் மனநிலையில் இல்லை. பைக்கை எடுத்துக்கொண்டு நேராக பெசன்ட் நகர் போனான். அவள் சொன்ன அபார்ட்மென்ட் நவநாகரிகமாக இருந்தது. ‘இங்கு கூடவா கால்கேர்ள் இருப்பாள்?’

13பி. காலிங்பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் கேட் வின்ஸ்லெட் மாதிரி இருந்தாள். ”வந்துங்க…” – உளற ஆரம்பித்தவனின் உதடுகளை அழுத்தமாகப் பொத்தினாள், தன் உதடுகளால்.

விடியும் வரை என்ன நேர்ந்தது என்றே மனோகருக்குத் தெரியவில்லை. றெக்கை கட்டி வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். அவளே அவனைக் குலுக்கி எழுப்பினாள். ”எவ்வளவு?” என்று தயக்கமாக பர்ஸைத் திறந்துகொண்டே கேட்டான்…

”வாரத்துக்கு ஒருத்தருக்கு இலவசம். இந்த வார இலவசம் உங்களுக்கு!” – பதில் சொல்லிவிட்டு, வாசல் வரை இழுத்து வந்து வெளியே தள்ளினாள். அவசர மாகக் கதவைப் பூட்டினாள்.

படிகளில் உற்சாகமாக இறங்கினான். பைக்கை ஸ்டார்ட் செய்தான். பாக்கெட்டை அனிச்சையாகத் தொட்டுப் பார்க்க, பர்ஸ் மிஸ்ஸிங். கையில் எடுத்த பர்ஸை பெட் மீதே வைத்தது நினைவுக்கு வந்தது. ”ஐயையோ… பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறதே? கிரெடிட் கார்ட்ஸ் வேற…”

திரும்ப அவசரமாக ஓடினான். படிக்கட்டில் ஓட அவகாசம் இல்லை. லிஃப்ட்டுக்குள் நுழைந்தான். ”எத்தனையாவது ஃப்ளோர் சார்?” லிஃப்ட் ஆபரேட்டர் விடியற்காலையிலேயே பட்டையெல்லாம் அடித்து பக்திப் பரவசமாக இருந்தார்.

”13-க்குப் போப்பா.”

”என்ன சார் விளையாடறீங்களா? இந்த அபார்ட் மென்ட்டுல மொத்தம் இருக்கிறதே 12 ஃப்ளோர்தான் சார்!”

– 06-05-09

Print Friendly, PDF & Email

4 thoughts on “13B யாவரும் நலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *