பேய் பேய்தான்

 

கல்பனாவுக்கு வயது இருபத்தி நான்கு. பி.ஈ முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாள். கழுவிச் சீவிய பப்பாளி நிறத்தில் தளதளவென்று இருந்தாள். சொந்த ஊர் மதுரை.

பெண்களுக்கான ஹாஸ்டல் டி.நகர் மார்க்கபந்து மேன்ஷனில் அவளுடைய தோழி நீரஜாவுடன் கல்பனா தங்கியிருக்கிறாள். நீரஜா மத்திய அரசின் ஆர்க்கியாலாஜி டிபார்மென்டில் வேலை செய்கிறாள். வாழைக்காய் கெச்சல் போல இருந்தாள். சொந்தஊர் காரைக்குடி.

இருவருக்கும் கடந்த மூன்று வருடங்களாக நட்புடன் கூடிய நல்ல புரிதல். பொங்கலை ஒட்டி வந்த ஒரு நீண்ட விடுமுறையில் இருவரும் ஊட்டி சென்றுவர முடிவு செய்தனர்.

நீரஜாவின் அப்பாவின் நெருங்கிய நண்பர் சிவா, ஊட்டி பார்ஸன் வாலியில் (Parsan Valley) ஒரு பழைய ஹோட்டல் வைத்திருந்தார். கோயமுத்தூர் ஏர்போர்ட்டுக்கு அவரே ஜீப்பை ஓட்டிவந்து தோழிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அந்த ஹோட்டல் ஊட்டிக்கு வெளியே சற்று ஒதுக்குப்புறத்தில் ஒன்பது அறைகளுடன் தனிமையாக இருந்தது. அறைகள் மிகப் பெரியதாக உயரமான கூரைகளுடன் காணப்பட்டது. பெரிய அறையின் மூலையில் ஒரு டேபிள், அதன்மீது அழுக்காக ஒரு போன், அதற்குக் கீழே ஒல்லியாக ஊட்டி டெலிபோன் டைரக்டரி வைக்கப் பட்டிருந்தது. மலைகளின் நடுவில் ஹோட்டல் அமைதியாக வீற்றிருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், பயமுறுத்தும் விதமாக அமானுஷ்யமாக இருந்தது.

நீரஜா கல்பனாவைத் தவிர வேறு எவரும் அந்த ஹோட்டலில் அப்போது தங்கியதாகத் தோன்றவில்லை. இரவு ஏழுமணிக்கே சாப்பாடு தயார்செய்து சுடச்சுட பரிமாறினார்கள். குளிர்வேறு வாட்டி எடுத்தது. சாப்பாடு முடிந்ததும் ஹோட்டல் விளக்குகள் அணைக்கப்பட்டன. வெளிப்புறம் இரண்டு செக்யூரிட்டிகள் மட்டும் காவலுக்கு இருந்தனர்.

தூக்கம் வராததால் நீரஜா பேய்க் கதைகள் நிறைய சொல்ல ஆரம்பித்து விட்டாள். கல்பனா மிகவும் பயந்த சுபாவம். அன்று இரவு சற்று பயத்துடன் இருவரும் தூங்கி எழுந்தனர்.

மறுநாள் காலை ஒன்பது மணிவாக்கில் சிவா ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தார். அவர்களுக்கு பார்ஸன் வாலியை ஜீப்பில் சுற்றிக் காண்பித்தார். அந்த இடத்தில்தான் மணிரத்னம் டைரக்ஷனில் ‘ரோஜா’ படத்தின் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டதாகச் சொன்னார். அடுத்து அவர்களை வெஸ்டர்ன் காட்ஸ் பகுதிக்கு அழைத்துச்சென்று யானைகளையும், கேரளாவின் பார்டர் ஏரியாவையும் காண்பித்தார். ஹோட்டலுக்குத் திரும்பி வந்து அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நீரஜாவின் மொபைல் சிணுங்கியது.

எடுத்துப் பேசியவள் “ஐயோ அப்பா” என்று அலறினாள். அவளுடைய அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று அம்மா சொல்லியதாகச் சொல்லி அழுதாள். சிவா அவளை உடனே அழைத்துக்கொண்டு கோயமுத்தூர் ஏர்போர்ட் விரைந்தார். தைரியமாக இருக்கச் சொன்னார்.

கல்பனா ஹோட்டலில் தனித்து விடப்பட்டாள். அடுத்தநாள் மாலைதான் அவளுடைய சென்னை விமானம். அந்த ஹோட்டலில் தனியாகத் தங்க அவளுக்கு பயமாக இருந்தது. சிவாவின் வீடு ஊட்டியில் இருக்கிறது என்பதால் அவர் ஊட்டிக்கு சென்றுவிட்டார். மறுநாள் மதியம்தான் அவர் ஹோட்டலுக்கு திரும்பி வருவார், கல்பனாவை பத்திரமாக ஏர்போர்ட்டில் கொண்டு சேர்ப்பதற்காக.

ஆனால் அன்று மாலை ஐந்து மணிவாக்கில் கோயமுத்தூர் சென்று அங்கு தங்கிவிட கல்பனா திடீரென முடிவு செய்தாள். ஷோல்டர் பேக்கை எடுத்துக்கொண்டு ஜீன்ஸ் டீஷர்ட்டில் ஸ்டைலாக ஹோட்டலை விட்டுக் கிளம்பினாள். ஹோட்டலில் ட்ரான்ஸ்போர்ட் வசதி எதுவும் இருக்கவில்லை. எனவே அருகிலிருந்த ஒரு சிறிய பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்துசென்று பஸ்ஸுக்காக காத்திருந்தாள்.

ரொம்ப நேரம் காத்திருந்தும் பஸ் எதுவும் வரவில்லை. மழைவேறு[SK1] பிசுபிசுக்க ஆரம்பித்தது. இருட்ட ஆரம்பித்தது. கல்பனாவுக்கு மெல்லியதாக அடி வயிற்றில் ஒரு பயம் ஆரம்பித்தது. இன்று இரவு ஹோட்டலில் எப்படியேனும் கஷ்டப்பட்டு தனியாக தங்கியிருந்துவிட்டு நாளைக் காலையில் கிளம்பியிருக்கலாமே என்று தோன்றியது.

அப்போது ஒரு கார் வெளிச்சத்தை பரப்பிக்கொண்டு விரைந்து வந்தது. கல்பனா உடனே ரோட்டின் மத்திய பகுதிக்கு சென்று லிப்ட் கேட்டு கையை ஆட்டி காரை நிறுத்தச் சொன்னாள். ஆனால் அந்தக் கார் அவளை உரசிக்கொண்டு தாண்டிச் சென்றுவிட்டது. கல்பனாவுக்கு மிகுந்த ஏமாற்றமாகிப் போய்விட்டது. பயம் அடிவயிற்றைப் புரட்டியது. மழைவேறு சற்று வலுத்தது. முற்றிலும் இருட்டாகி விட்டது. கல்பனா தனியே பஸ்ஸுக்காக காத்திருந்தாள். மணி ஏழரை. குளிர் வாட்டியது.

அடுத்த பத்து நிமிடங்களில் மற்றொரு கார் சற்று மங்கலான வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு அவளை நோக்கி மெதுவாக ஊர்ந்து வந்தது. கல்பனா உடனே மழையில் நனைந்தபடி காரின் மேல் விழுந்து விடுவதுபோல் அதை மறித்தபடி ஓடிப்போய் நின்றாள். அது மெதுவாக ஊர்ந்ததே தவிர முற்றிலுமாக நிற்கவில்லை. யோசிக்க நேரமில்லை. ஆபத்துக்கு பாவமில்லை என்று எண்ணிய கல்பனா உடனே காரின் பின்பக்க கதவை அவசரமாகத் திறந்து பாய்ந்து உள்ளே புகுந்து கொண்டாள். அப்பாடா என்று நிம்மதியடைந்து சற்று நிதானமாகப் பார்த்தபோது அந்தக் காரில் யாருமில்லை. உள்ளே இருட்டாக இருந்தது.

அப்பொழுதுதான் கல்பனா கவனித்தாள். காரின் முன்பக்க டிரைவர் ஸீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் மட்டும் தானாக நகர்ந்து கொண்டிருந்தது. கல்பனா உறைந்து போனாள். பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது. கத்தவும் முடியவில்லை. அப்படியே கத்தினாலும் அந்த இருட்டு வனாந்தரத்தில் யார் உதவிக்கு வரப்போகிறார்கள்?

கார் சீராக ஓடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய வலதுபக்க திருப்பம் வந்தது. எதிரே மிகப்பெரிய பள்ளத்தாக்கு. கார் அதில் விழுந்து நிச்சயம் செத்தோம் என்று பயத்தில் பதறியபோது, திடீரென ஒரு நீண்ட மனிதக் கை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து கார் ஸ்டீரியங்கை வலதுபுறம் திருப்பியது. கல்பனா பயத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டாள்.

கார் சரிவான ரோடில் சற்று வேகமாகச் சென்றது. சற்று தூரத்தில் ஒரு பெரிய கேட் தெரிந்தது. உள்ளே விளக்குகளின் வெளிச்சம். அது ஒரு பெரிய ஹோட்டல் என்பதைப் புரிந்துகொண்டாள். கார் வேகமாக கேட்டினுள் புகுந்தபோது அங்கிருந்த செக்யூரிட்டி காரைத் தடுத்து நிறுத்த முயன்றான். அது நிற்காமல் அவனைக் கடந்து சென்று தறிகெட்டு ஓடி போர்ட்டிகோவில் ஏற்கனவே நின்றிருந்த மற்றொரு காரின் மீது மோதி நின்றது.

அவ்வளவுதான், கல்பனா மின்னலென காரிலிருந்து வெளியேறி ஹோட்டல் ரிசப்ஷனுக்கு ஓடிச்சென்று “பேய் பேய்” என்று அலறியபடி அங்கிருந்த சோபாவில் மயங்கிச் சரிந்தாள். ரிசப்ஷன் ட்யூட்டியில் இருந்த ஆண்கள் போர்ட்டிகோவுக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு இரண்டு கார்கள் மோதியபடி நின்றதைப் பார்த்து திகைத்து நின்றனர். புதிதாக உள்ளே வந்து மோதிய காரில் ட்ரைவர் இல்லாதது கண்டு மேலும் அதிர்ச்சியாகினர்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த இடத்திற்கு இரண்டு இளைஞர்கள் மூச்சிரைக்க ஓடிவந்தனர்.

அதில் ஒருவன் “ஸாரி ஜென்டில்மென், நாங்கள் பார்ஸன் வாலியில் காரை நியூட்ரலில் நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றோம். ஹாண்ட் ப்ரேக் போட நான் மறந்துவிட்டேன் போலும். அதனால் கார் நகர ஆரம்பித்துவிட்டது. காரைத் துரத்திக்கொண்டே அதன் பின்னாலேயே நாங்கள் ஓடி வந்தோம்; நல்லவேளையாக ஒரு பெரிய திருப்பத்தில் காரைத் திருப்பிவிட்டோம். அது என்னடாவென்றால் சரிவான ரோடில் விரைந்துவந்து உங்கள் ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டது…”

மற்றொருவன் பதட்டத்துடன், “ஹாங்… ஒரு பெண் காரின் உள்ளே பாய்ந்து ஏறிக்கொண்டாளே…” என்று காரினுள் எட்டிப்பார்த்தான்.

உள்ளே யாருமே இல்லாதது கண்டு, “ஓ காட், அது பெண்ணல்ல பேய்” என்று அலறியபடி சரிந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மணிவண்ணனைப் பிடிக்காதது சுகந்திக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வங்கியில் தன்னுடன் வேலைசெய்யும் அவனை கடந்த இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறாள். அவனுக்கு போனவாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு ப்ரமோஷனுடன் டிரான்ஸ்பர் ஆகிவிட்டது. சென்னை செல்லும்முன் அவனை வீட்டிற்கு ஒருமுறை அழைத்துவந்து தன் பெற்றோர்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
குமரேசனுக்கு சொந்த ஊர் தென்காசி. சென்னையின் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலையில் இருக்கிறான். ஒருவாரம் முன்பு புதிதாக வந்து சேர்ந்த தன்னுடைய டீம்லீடர் கவிதாவின் மீது அவனுக்கு காதல் துளிர்விட்டது. ஒரு நாளில் குறைந்த பட்சம் பன்னிரண்டு ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அதிர்ச்சி வைத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோமதி கணவர் மச்சக்காளையின் தீவிர பக்தை. தாய்க்குப் பின் தாரம் என்கின்ற பாணியில் சொன்னால் மணாளனுக்குப் பின்தான் மகன்! ஆனால் இதெல்லாம் சம்சுதீன் கடைக்குப்போய் இனிமேல் பீடி வாங்கிக்கொண்டு வரமாட்டேன் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘கோழிக்கோட்டில் வரவேற்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தன. ராஜாராமன் அவனுடைய மனைவி பொற்கொடியை அறிமுகம் செய்து வைத்தான். பெரிய அளவில் வெற்றி பெற்று, பெரிய அளவில் செல்வமும் திரட்டி இருக்கும் புகழ்பெற்ற டாக்டரின் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
வீடு ஒரே களேபரமாக இருந்தது. அதனை முறையாக ஒழுங்கு படுத்த நினைத்தபோது சரஸ்வதிக்கு மலைப்பாகவும். ஆயாசமாகவும் இருந்தது. கிரகப்பிரவேசம் முடிந்து புதிய வீட்டிற்கு குடியேறி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் எல்லாமே போட்டது போட்டபடி கிடக்கிறது. பெங்களூரின் ஒதுக்குப் புறத்தில் புதிதாக முளைத்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
நித்யாவுக்கு மனதில் சந்தோஷ ரேகைகள் கீற்று விட்டன. பத்து வருட கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு - அவள் மாமனார், மாமியார் அவளின் தனிக்குடித்தனத்திற்கு சரியென்று சொன்னது... மிகவும் சந்தோஷமான தருணங்கள். கணவருக்கு ஒரு தங்கையும்; இரண்டு தம்பிகளும். நாத்தனாரின் புடுங்கல்தான் நித்யாவுக்கு வேதனை என்றால்; ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘மகள்களின் சம்மதம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) வழக்கமாக அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் சுகுணாவின் கணவன் சுப்பையா, அன்று ஆறு மணிக்கே திரும்பிவிட்டான். வீடு அமைதியாக இருந்ததை நுழைந்ததுமே கவனித்து விட்டான். எப்போதும் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திரம்’ கதையைப் படித்துவிட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்தச் சாமியார் மேலும் தொடர்ந்தார்... “காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிப்பதால் வலிமை; ஆற்றல்; கவர்ச்சி; திறமான யோசனை; இயக்கம்; பயபக்தி; நல்லது கெட்டதை அறியும் ஆற்றல்; செயலூக்கம்; தைரியம்; நினைவாற்றல்; ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அழகான பெண்டாட்டி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). “வேணுகோபால் மவளை நீ கட்டிக்கிட்டா எனக்கு அவன் தம்பிமுறை ஆயிடுவானே! ரொம்பப் பெரிய விஷயமாச்சே அது. உடனே போ மாப்ளே; கல்யாணத்துக்கு மாமன் சாஸ்திரத்துக்காக எனக்குப் பட்டு வேட்டியும் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘முதல் கதை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) என் முதல் கதை ‘திசை மாறிய எண்ணங்கள்’ விகடனில் வெளியான பிறகு எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. இதனிடையில் எனக்கு பெங்களூர் டைட்டான் வாட்சஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு நல்ல ...
மேலும் கதையை படிக்க...
சுகந்தியின் காதல்
நட்பதிகாரம்
பாம்ப்ரெட்
மழை வனப்பு
யூகம்
தனிக்குடித்தன ஆசை
அடுத்த பெண்மணி
காயத்ரி மந்திர மஹிமை
விஷச் சொட்டு
அடுத்த ஜென்மம்

பேய் பேய்தான் மீது 2 கருத்துக்கள்

  1. வேடிக்கையான பேய் கதை.படிக்க சுவாரஸ்யமாக. இருந்தது.

  2. Lavanya says:

    தெரியாத்தனமாக இரவில் கதையை படித்தேன். பயந்துவிட்டேன். விறுவிறுப்பான கதை.
    லாவண்யா, மேட்டூர்அணை, சேலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)